எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, செப்.9 தெலங் கானா சட்டப் பேரவை கலைக் கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு புதிதாக தேர்தல் நடத் துவது தொடர்பாக ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் குழு அந்த மாநிலத்துக்குச் செல்லவுள்ளது.

வரும் 11-ஆம் தேதி அக் குழு அங்கு செல்லும் என்றும், தேர்தலுக்கு ஆயத்தமாவது தொடர்பான சாத்தியக்கூறு களை ஆய்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா தலைமையில் அந்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. இந் தத் தகவலை தேர்தல் ஆணை யம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

119 உறுப்பினர்களைக் கொண்ட தெலங்கானா சட்டப் பேரவையை கலைக்குமாறு மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான அமைச் சரவை வியாழக்கிழமை பரிந் துரைத்தது. அதை அந்த மாநில ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம் மனும் ஏற்றுக் கொண்டார். அதன் தொடர்ச்சியாக அங்கு விரைவில் தேர்தல் நடத்த வேண் டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ் தான், சத்தீஸ்கர், மிசோரம் உள்ளிட்ட மாநில சட்டப் பேர வைகளுக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடை பெற உள்ளது. அவற்றுடன் சேர்த்து தெலங்கானாவுக்கு தேர்தல் நடத்தப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தச் சூழலில் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தெலங்கானாவுக்கு சிறப்புக் குழு சென்று ஆய்வு செய்யும் எனத் தெரிவித்துள்ளது. அக் குழு தாக்கல் செய்யும் அறிக் கையின் அடிப்படையில் தேர் தல் தேதி முடிவு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே, இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் சந்தி ரசேகர் ராவ் கோரியதை ஏற்க முடியாது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறு கையில், "தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்ற அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்' என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner