எழுத்துரு அளவு Larger Font Smaller Font

16.9.2018 ஞாயிற்றுக்கிழமை

* பிற்பகல் 2 மணிக்கு

* இடம்: கோலாலம்பூர் டான்சிறீ கே. ஆர். சோமா அரங்கில், ஆணாகப் பிறந்து - பெண்களுக்காக உழைத்த சுயமரியாதை இயக்கத்தின் தலைவரான, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 140 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில், (தமிழக) திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர், பேராசிரியர் சுப. வீரபாண்டியனின் தளபதிகளின் ஒருவரும் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணைப் பொதுச் செயலாளர், சிற்பி அர.செல்வராசுவின் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம்.

* தலைப்பு: அய்யாவின் தொண்டறத்தில் விஞ்சி நிற்பது மாந்தநேயமே .. ! பகுத்தறிவே...! என்ற தலைப்பில் இரு அணிகளை பிரதிநிதித்து தலா 3 பேச்சாளர்கள் பேசவுள்ளனர்.

*ஆசிரியர் யோகேசு வரன் மணிராசு, ஆதித்தன் மகாமுனி, பொன். கோகிலம் ஆகியோரும் தங்களின் சிறந்த சொல்லாடலை வழங்கவுள்ளனர். றீ மலேசியாவில் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் பகுத்தறிவு சார்ந்த பட்டிமன்றம்  இதுவாகும்.  எனவே, இலவசமாக நடைபெறும் தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவையும் தமிழிசைத்தோழர் கதிரவன் தலைமையில், செங்கதிர் இசைக் குழுவினர் வழங்கும் தமிழிசைப் பாடல்களையும் கேட்டு மகிழ கழகப் பொதுச் செயலாளர் அன்பரசன் சண்முகம் கழகத் தோழர்கள், பொது இயக்கங்களின் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என அனைவரையும் அழைக்கின்றார்.

* ஏற்பாடு: மலேசியா மாந்தநேய திராவிடர் கழகம்

* தொடர்புக்கு: 012-2679180 / 012-9424301/012-3965793

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner