எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ரியோ டி ஜெனிரோ, செப். 9- தென் அமெரிக்க நாடான பிரேசிலில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. வலதுசாரி கட்சியான சோசியல் லிபரல் கட்சியின் வேட்பாளராக முன் னாள் ராணுவ தளபதி ஜெர் போல்சோனரோ போட்டியிடுகிறார்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில், ஜெர் போல்சோனரோ  நேற்று பிரச் சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அங்கு ஏராளமானோர் கூடி அவரது பேச்சை கேட்டுக் கொண்டு இருந்தனர்.  ஆதரவாளர்கள் போல்சோனரோவை தோளில் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டிருந்த போது, ஒரு நபர் அவரது வயிற்றில் கத்தியால் குத்தினான். இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி சரிந்தார்.

பிரச்சாரக் கூட்டத்தில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. உடனடியாக ஜெர் போல் சோனரோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்தம் அதிகமாக வெளியேறியதால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, 2 மணி நேரம் தீவிர சிகிச் சைக்குபின் உடல்நிலை தேறி யுள்ளதாக அவரது மகன் பிளா வியோ ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே போல் சோன ரோவை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அவனது பெயர் அடெலியோ ஒபிஸ்போ டி ஒலி வேஸ்ரோ (63) என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தி யால் குத்திய நபர் இடதுசாரி கட்சியான பிஎஸ்ஓஎல்இல் 2007--2014 வரை உறுப்பினராக இருந்துள்ளார். ஒபிஸ்போவின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஜெர் போல்செனரோவை எதிர்த்து அவர் கருத்துக்களையும் பதி விட்டுள்ளார்.

காவல்துறை அதிகாரிகள் கத்தியால் குத்தியவருக்கு மன நிலை பாதிக்கப்பட்டுள்ளாத என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள் ளனர்.

கத்திக்குத்து சம்பவத்துக்கு பிரேசில் அதிபர் மைக்கேல் டேமர், முன்னாள் அதிபர் லுலா டா சில்வா மற்றும் தேர்தலில் போட்டியிடும் சக வேட்பாளர்களும் கடும் கண்ட னத்தை தெரிவித்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner