எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டோக்கியோ, செப். 9- ஜப்பான் நாட்டில் கடந்த 4-ஆம் தேதி ஜெபி புயல் தாக்கியது. இந்தப் புயல் காரணமாக கனமழை பெய்தது. கடந்த 25 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. புயல், மழையில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பல்வேறு நகரங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கின. விமானங்கள், கப்பல்கள், ரயில் சேவைகள் ரத்தாகி போக் குவரத்து முடங்கியது. மின் சாரம் துண்டிக்கப்பட்டு லட்சக் கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின. புயலால் ஏற்பட்ட பாதிப்பு மறைவதற்குள் நேற்று அதி காலை  3.08 மணிக்கு ஹொக் கைடோ தீவில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோ லில் 6.7 புள்ளிகளாக பதிவா னது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பல முறை அதிர்வு கள் ஏற்பட்டன.

அட்சுமா உள்ளிட்ட பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற் பட்டன. இதில் கட்டடங்கள் தரைமட்டமாகின. பாலங்கள் பிளவுபட்டன. சாலைகள் பெருத்த சேதம் அடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன.  தகவல் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 30 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின. விமான சேவைகள், ரயில் சேவைகள், புல்லட் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. நியூ சிட்டோஸ் விமான நிலை யம் மூடப்பட்டது.

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி புதையுண்ட வீடு களில் சிக்கி இறந்தவர்கள் எண் ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ள தாக ஜப்பான் பிரதமர் சின்சோ அபே தெரிவித்துள்ளார். 26 பேர் காணாமல் போனதாக ஊடகங் கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner