எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நியூயார்க், செப். 9- அமெரிக்காவில் சின்சினாட்டி நகரில் பவுன் டெயன் சதுக்கத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் புகுந்த மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். இதில் பிரித்வி ராஜ் கான்டோ (25), ரிச்சர்ட் நியூகாமர் (64), லூயிஸ் பெலிப் கால்டெரான் (48) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் கொலை யாளியுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். அதில் கொலையாளி உயிரிழந்தான். அவனது பெயர் ஓமர் சான்டா பெரேஷ் (29) என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதற்கிடையே, துப்பாக்கி சூட்டில் பலியான 3 பேரில் பிரித்விராஜ் இந்தியர் என தெரிய வந்துள்ளது. இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள தெனாலியை சேர்ந்தவர். வேலூரில் உள்ள வி.அய்.டி.யில் பி.டெக் முடித்தார். பின்னர் அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்.சி. படித்தார். சின்சினாட்டியில் துப்பாக்கி சூடு நடந்த வங்கியின் தலைமை அலுவலகத்தில் பணி புரிந்து வந்தார்.

இவரது தந்தை கோபிநாத் விஜயவாடாவில் ஆந்திர மாநில வீட்டு வசதி வாரியத்தில் துணை செயற்பொறியாளராக பணிபுரிகிறார். தாயார் பெயர் சுதாராணி. குண்டூர் மாவட்டம் தெனாலியில் வசிக்கின்றனர். மனோக்னா என்ற தங்கை உள்ளார். இவர் கே.எல்.பல்கலைக் கழகத்தில் பி.டெக் 3-ஆவது ஆண்டு படித்து வருகிறார். பிரித்விராஜ் கொல்லப்பட்ட தகவல் அறிந்து அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதற்காக அவர் சில மாதங்களில் இந்தியா திரும்ப இருந்தார்.

பிணக்குவியல்: ஒரே இடத்தில் புதைத்த 166 உடல்கள் கண்டெடுப்பு

மெக்சிகோ சிட்டி, செப். 9- ஹெராயின், கஞ்சா, அபின், பிரவுன் சுகர் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் உற் பத்தியில் உலகின் முக்கிய நாடாக மெக்சிகோ விளங்கி வருகிறது.  இங்குள்ள போதைப்பொருள் மாபியாக்கள் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற தாக்குதல்களால் ஒருவரை மற்றவர் பழிதீர்த்து வருகின்றனர்.

இதுதவிர, அபின் செடிகளை வளர்ப்பதிலும், வெளிநாட்டு தரகர்களுக்கு பொருட்களை விற்பனை செய்வதிலும் இங் குள்ள மாபியாக்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில், கடத்தல் பேர்வழிகளின் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் சமீபகாலமாக சடலங்கள் வரிசையாக கண்டெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், மெக்சிகோவின் கிழக்கு பகுதியில் உள்ள வெராகுருஸ் மாநிலத்தில் ஒரே இடத்தில் 32 பள்ளங்களில் புதைக்கப்பட்டிருந்த 166 சடலங்கள் சமீபத்தில் கண்டெடுக் கப்பட்டதாக அம்மாநில அரசின் தலைமை வழக்குறிஞர் நேற்று தெரிவித்துள்ளார்.  இதே பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சுமார் 250 மண்டை ஓடுகள் கிடைத்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner