எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோவை, செப். 9- ஜிஎஸ்டி நடை முறையில் ஜாப் ஒர்க்கிற்கு விதிக்கப்பட்ட 18 சதவீத வரியை தொழிற்துறையினர் திரும்ப பெறும் உத்தரவு நீக் கப்பட்டுள்ளதால், கோவையில் 20 ஆயிரம் குறுந்தொழில் கூடங் கள் மூடும் நிலைக்கு ஆளாகி யுள்ளது.

இதுகுறித்து கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற் பத்தியாளர்கள் நலச்சங்கம் (கொசிமா) தலைவர் சுருளி வேல் கூறியதாவது: கோவை யில் உள்ள இன்ஜினியரிங் உள்ளிட்ட பல்வேறு உற்பத்தி தொழில் துறையினர் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்க ளுக்கு தேவையான உதிரிபாகங் கள் மற்றும் பொருள்களில் 70 சதவீதத்தை இம்மாவட்டத்தி லுள்ள 30 ஆயிரத்திற்கும் மேற் பட்ட குறுந்தொழில் கூடங்களுக்கு ஜாப் ஆர்டர் கொடுத்து, உற்பத்தி செய்து வருகின்றனர்.

ஜிஎஸ்டியில் ஜாப் ஒர்க் கிற்கு 18 சதவீதம் விதிக்கப் பட்டுள்ளது. இதில் ஜாப் ஒர்க் மேற்கொண்டு சப்ளை செய்யும் குறுந்தொழில் கூடங்கள் ஆண்டுக்கு ரூ.20 லட்சத்திற்குள் வர்த்தகம் மேற்கொண்டால், அவர்களுக்கு பதில் ஜாப் ஒர்க் கொடுப்பவரே 18 சதவீத வரியை அரசுக்கு செலுத்த வேண்டும். ரூ.20 லட்சத்திற்கு மேல் ஜாப் ஒர்க் செய்பவர் 18 சதவீத வரியை, கூலித்தொகையுடன் பில்லில் போட்டு கொள்ளலாம். அத் தொகையை ஜாப் ஒர்க் கொடுப் பவர் செலுத்த வேண்டும். ஏற் கெனவே மூலப்பொருள்களுக் கான ஜிஎஸ்டி, விற்பனை செய் யும் போது ஜிஎஸ்டி ஆகியவை அமலில் உள்ளபோது, ஜாப் ஒர்க்கிற்கு செலுத்தும் வரியும் சேர்ந்து கொள்வதால் தொழில் துறையினர் பாதிக்கப்பட்டனர். இதை மத்திய அமைச்சகத்திற்கு வலியுறுத்தியதை தொடர்ந்து, ஜிஎஸ்டி கவுன்சில், ஜாப் ஒர்க்கிற்கு செலுத்திய 18 சதவீத வரியை தொழிற்துறையினர் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தது.இதனால் கடந்த ஒரு ஆண்டாக 18 சதவீதத்தை திரும்ப பெற முடியும் என்கிற எண்ணத்தில் வரி செலுத்தி வந்தனர். சிலர் அத்தொகையை பெற்றுள்ளனர். பெரும்பாலானோர் இன்னும் பெறவில்லை. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் வெளியிட்ட அறி விப்பில் ஜாப் ஒர்க்கிற்கு செலுத் திய 18 சதவீத வரியை திரும்ப பெற முடியாது. திரும்ப பெற்ற வர்களும் 18 சதவீத வரியை கட்டாயமாக செலுத்த வேண் டும். அதை கடந்த ஆண்டு ஜி எஸ்டி அமலுக்கு வந்த ஜூலை மாதத்தில் இருந்தே செலுத்த வேண்டும், என்று அறிவித்து உள்ளது. இத்தகைய நடை முறையால் கோவை மாவட்டத் திலுள்ள 30 ஆயிரம் தொழிற் கூடங்களில் ஏற்கெனவே 10 ஆயிரம் தொழிற்கூடங்கள் ஜாப் ஒர்க்கை இழந்துள்ளன. இது மேலும் 10 ஆயிரம் அதிகரித்து, 20 ஆயிரம்தொழிற்கூடங்களுக்கு ஜாப் ஒர்க் கிடைக்காத சூழ் நிலை நீடிக்கும். இதனால் குறுந்தொழில் முனைவோர்கள் தங்கள் கூடங்களை இழுத்து மூடிவிட்டு, கூலித்தொழிலாளி யாக ஜாப் ஒர்க் கொடுக்கும் நிறுவனங்களுக்கே செல்ல வேண்டி வரும் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner