எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நியூஜெர்சி, செப்.9 உலகக் கோப்பை படுதோல்விக்கு பின் முதன்முறையாக கால்பந்து நட்பு ஆட்டத்தில் பங்கேற்ற பிரேசில் அணி 2-க்கு0 என அமெரிக்காவை வீழ்த்தியது. கடந்த ஜூலை மாதம் ரசியாவில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது 5 முறை உலக வாகையரான பிரேசில். இதனால் அந்நாட்டு ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் முதன்முறை யாக நியுஜெர்சியில் நடைபெற்ற நட்பு ஆட்டத்தில் அமெரிக்கா வுடன் மோதியது. பிரேசில். தொடக்கம் முதலே பிரேசில் அணி ஆதிக்கம் செலுத்தியது. நட்சத்திர வீரர்கள் நெய்மர், ராபர்டோ பிர்மினோ ஆகியோர் தலா 1 கோலடித்தனர். இதன் மூலம் 2க்கு-0 என வென்றது. முதன்முறையாக நெய்மர் அணியின் முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதிக கோலடித்தவர்கள் பட்டியலில் பீலே 77, ரொனால்டோ 62 ஆகியோர் உள்ள நிலையில் மேலும் 5 கோல்கள் அடித்தால் ரொனால்டோவின் சாதனையை முறியடிப்பார் நெய்மர்.

நேசன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் முன்னாள் உலக வாகையரான இத்தாலியும் -போலந்தும் மோதிய ஆட்டம் 1க்கு-1 என சமனில் முடிந்தது. உலகக் கோப்பை போட்டி முதன் முறையாக தகுதி பெறாத சோகத்தில் உள்ள இத்தாலி அணிக்கு புதிய பயிற்சியாளராக மான்சினி நியமிக்கப்பட்டார். அதே நேரத்தில் போலந்து அணிக் கும் புதிய பயிற்சியாளர் ஜெர்சி பிரெசக் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இரு அணி களுக்கு இடையே முதல் ஆட்டம் பொலகோனோவில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடந்தது. இரு அணிகளும் தலா 1-க்கு1 கோலடித்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. வரும் திங்கள்கிழமை போர்ச்சுகல் அணியை இத்தாலி எதிர் கொள்கிறது. கிளாஸ்கோவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் உலகக் கோப் பையில் மூன்றாம் இடம் பெற்ற பெல்ஜிய அணி 4க்கு-0 என்ற கோல் கணக்கில் ஸ்காட் லாந்து அணியை வீழ்த்தியது. நட்சத்திர வீரர்கள் லுகாகு, ஈடன் ஹசார்ட், மிச்சி ஆகியோர் அபார மாக ஆடி கோலடித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner