எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நியூயார்க், செப்.9 யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா 6-க்கு2, 6-க்கு4 என்ற நேர் செட்களில் வெற்றி வரலாறு படைத்தார்.

யுஎஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங் கனை செரீனா வில்லியம்ஸ் - ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா ஆகியோர் மோதினர். இதில், ஒசாமா 6க்கு-2, 6-க்கு4 என்ற நேர் செட் கணக்கில் செரீனா வில்லியம்சை வீழ்த்தினார்.

இதன் மூலம்,  ஒசாகா யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் வாகையர் பட்டத்தை வென்றார்.  இவர், கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முதல் ஜப்பான் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். இந்த இறுதிப்போட்டியில் செரீனா வில்லியம் சுக்கும், நடுவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால், செரீனா வில்லி யம்ஸ் புள்ளிகளை இழக்க நேரிட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner