எழுத்துரு அளவு Larger Font Smaller Font

செப்.12 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை,  செப்.9 சென்னை மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரும் 12ஆம் தேதி வரை வரவேற்கப் படுகின்றன.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின்கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு மாவட்ட அளவில் மூன்றாம்கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கப் பட உள்ளனர். தகுதியுள்ள மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கு இணையதளத்தில் வரும் 12-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தொழிற்பயிற்சி பாடப் பிரிவுகள், அவற்றில் சேருவதற்கான கல்வித் தகுதி, இடஒதுக்கீடு போன்ற விவரங்களை இணைய தளத்திலேயே பெறலாம். மேலும் தகவலுக்கு 044-2250 1530 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பெண்கள் சக்தி விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை, செப்.9 மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மூலம் வழங்கப்படும் நாரி சக்தி புரஸ்கார் எனப்படும் பெண்கள் சக்தி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுதொடர்பாக சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்காக அயராது பாடுபடும் பெண்களுக்கும், நிறுவனங்களுக்கும் பெண்கள் சக்தி விருது வழங்கப்பட்டு வருகிறது. 19 ஆவது ஆண்டாக இந்த ஆண்டு வழங்கப்படவுள்ள இவ்விருதுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை வரும் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன், துணை செயலர் (டபிள்யு டி & அய்.சி.), மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம், அறை எண். 632, 6 -ஆவது மாடி, சாஸ்திரி பவன், புதுதில்லி 110 001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு செப். 18 முதல் செய்முறைத் தேர்வு

சென்னை, செப்.9 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்களுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வு செப். 18ஆம் தேதி தொடங்கவுள்ளது. இது குறித்து அரசு தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவி வெளியிட்ட செய்தி: செப். 18ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை, அறிவியல் செய்முறை தேர்வு நடத்தப்பட உள்ளது.

அறிவியல் செய்முறைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், ஏற்கெனவே நடந்த செய்முறைத் தேர்வில் பங்கேற்காதவர்கள், புதிய தேர்வர்கள் என அனைவரும், இந்த செய்முறைத் தேர்வில் பங்கேற்க வேண்டும். மார்ச் மாத தேர்வுக்கு விண்ணப்பித்த தனி தேர்வர்கள், இந்தத் தேர்வில் பங்கேற்க முடியாது. செய்முறைத் தேர்வு குறித்த விவரங்களை மாவட்டக் கல்வி அலுவலகங்களில் தெரிந்து கொள்ளலாம்.

காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி தொடரும்: பரமேஸ்வரா பேட்டி

பெங்களூரு, செப்.9 காங்கிரசு அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் துணை முதல்வர் பரமேஸ்வரா பெங்களூ ருவில் ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இழுபறி நிலை உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் செயல்பட வேண்டிய நிலை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப் பட்டது.

இந்த கூட்டத்திற்கு பிறகு பரமேஸ்வரா செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- நகர உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் பெரும்பாலான இடங்களில் காங்கிரசு வெற்றி பெற்றுள்ளது. உள்ளாட்சி அமைப்பு களிலும் காங்கிரசு-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி தொடரும். ஜனதா தளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளோம்.  நாடாளு மன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இதனால் மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் தங்களின் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போது இருந்தே தயாராகும்படி அறிவுறுத்தி இருக்கிறோம்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner