எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கட்டின பெண்ஜாதியை விட தாசி வீட்டுக்குப்போய் சொத்தைப் பாழாக்கி வியாதி கொள்ளுகிறவர்களைப் பார்த்து ஏனப்பா கட்டின பெண்ஜாதியை வீட்டில் வைத்து விட்டுத் தாசி வீட்டிற்குப்போய் சொத்தையும் பாழாக்கி வியாதியும் கொள்ளுகிறாய் என்றால், கீழ்க்கண்ட மாதிரி பதில் சொல்லுகிறான்.  அதாவது, வீட்டில் என்ன இருக்கிறது? அவளைப் பார்த்தாலே எனக்குப் பிடிப்பதில்லை அவள் நடந்துகொள்ளுகிற மாதிரியே மனதிற்கு அசிங்கமாகப் படுகிறது.  ஒரு கட்டிலுண்டா ?  மெத்தையுண்டா?  வாசனையுண்டா?  அடிப்பதுண்டா, கிள்ளுவதுண்டா, சட்டிப் பானை கழுவுகிறவள் தானே என்று ஆரம்பித்து விடுகிறானே யல்லாமல் , இதெல்லாம் எதற்காகச் செய்யப்படுகிறது - பின்னால் நம்முடைய கதி என்னாகும் என்கிற கவலையே இல்லாமல் அறிவீனமாய் நடந்து கொள்ளுகிறான்.

அப்படிப்போல் நம்மை மயக்கி ஏய்த்து, நம்மைப் பாழாக்கி, கொள்ளை கொள்ள நடக்கும் பத்திரிகைகள் ஏமாற்றத்தகுந்த மாதிரியாகத்தான் நடத்தப்படும்.  ஒருநாள் பூரா படிப்பதற்கும் விஷயமிருக்கலாம். ஆனால், அது பெரும்பாலும் என்ன விஷயம்?  நம்மைக் கழுத்தறுக்கும் விஷயமும்,  பொழுது போக்கு விஷயமுமாகத் தானே இருக்கும்.  ஆதலால் மானமுள்ள மக்கள் தமது சொந்தப் பெண்டை அன்னியன் குற்றம் சொல்லும்படியாகவும், கஞ்சிக்குத் திண்டாடும் படியாகவும் விடாமல் காப்பதை எப்படி தமது கடமையாய் நினைப்பார்களோ அதுபோல் திராவிடன் பத்திரிகையை ஆதரிப்பதோடு, கட்டின பெண்டைத் தெருவில் அலையவிட்டுத் தாசி வீடு காத்துத் திரிவதுபோல் திராவிடனை விட்டுப் பார்ப்பனப் பத்திரிகைகளைக் கட்டி அலைவதை மறந்து, நமது மானத்தைக் காப்பாற்ற உதவி செய்யவேண்டும் என்பதாகத் தாழ்மையோடு கேட்டுக் கொள்ளுகிறோம். இந்த மார்க்கம்தான் பாமர மக்களைக் காப்பாற்றவும், நமது மக்கள் எல்லோருக்கும் சுயமரியாதை ஏற்படவும் சரியான மார்க்கமாகும்.

- 'குடிஅரசு' - தலையங்கம் - 30.01.1927

'திராவிடன்' பத்திரிகைக்குத் தானே எழுதினார் 'விடுதலை'க்காக எழுதவில்லையே என்று எண்ண மாட்டீர்கள் என்றே கருதுகிறோம். 'திராவிடன்' என்ற இடத்தில் 'விடுதலை' என்று பொருத்திப் பாருங்கள் சரியாக இருக்கும்.

நாம் என்னதான் பொது மேடைகளில் பல மணி நேரம் கரடியாகக் கத்தினாலும் நமது 'விடுதலை'யில் வெளிவரும் கருத்துகளும் தகவல் களும் தான் - மனத்தளத்தில் கல்வெட்டுகளாக நிற்கும் - நினைவூட்டும் - நெட்டித் தள்ளும் - நேரிய பாதைக்கு!

கருஞ்சட்டைத் தோழர்களே!

முதலில் 'விடுதலை'யை நாம் படிப்போம் - சுந்தாதாரர் ஆவோம் - கழகத் தோழருக்கு அடிப்படைத் தகுதி இது தானே!

பிறகு 'விடுதலை'யை வீடு வீடாகக் கொண்டு சேர்ப்போம்!

விடுதலை வேந்தர் தந்தை பெரியார் பிறந்த நாள் செப்டம்பர் 17க்கு இடையில் ஏழே நாள்கள்தான்! தலைவரிடம் நாம் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டாமா? 17க்குள் 5000 'விடுதலை' சந்தாக்களைத் திரட்டிட தேனீயாகப் பறந்து பறந்து பணியாற்றுவோம்! பணியாற்றுவோம்!

- கருஞ்சட்டை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner