எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, செப்.9 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளனின் கருணை மனு தொடர்பாக வியாழக்கிழமை பிறப்பிக்கப்பட்ட உத்தர வின் நகல் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா, கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவு தொடர் பாக ஊடகங்களில் பல்வேறு குழப்பங்கள் இருந்து வந்தன. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் உத்தரவு நகல் நேற்று (8.9.2018) பதிவேற்றம் செய்யப் பட்டது. அந்த உத்தரவு நகலில் கூறப்பட்டுள் ளதாவது: இந்திய உள்துறை அமைச்சகத்தின் சட்டப் பிரிவு (மத்திய மாநில பிரிவு) இணைச் செயலாளர், கடந்த 18.-04.-2018ஆம் தேதியிட்டு ஓர் உத்தரவை வெளியிட்டுள்ளார். அதில் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவித்தால் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி, பன்னாட்டு சிக்கலை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த உத்தரவை இந்த மேல்முறையீட்டு வழக்கில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முடியாது.  இந்த வழக்கில் தன்னை விடு தலை செய்யக் கோரி, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின் கீழ் எதிர் மனுதாரர் ஏ.ஜி. பேரறிவாளன் (எ) அறிவு, தமிழக ஆளுநரிடம் (கருணை) மனு அளித் துள்ளார் என்பது அவரது வழக்குரைஞர் கடந்த 1-ஆம் தேதி தேதி தாக்கல் செய்த ஆவ ணங்களிலிருந்து தெரிய வருகிறது. இந்நிலையில், அந்த (கருணை) மனு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரத்துக்கு உரிமை பெற்றவர் (ஆளுநர்) பரிசீலிக்கலாம்.

மேற்குறிப்பிட்ட கருத்துகளின் படி, (மத்திய அரசின்) இந்த மேல்முறையீட்டு மனுவும், நிலுவையில் உள்ள மனுக்களும் முடித்து வைக்கப்படுகின்றன என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner