எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆர். ராமச்சந்திரன்

(62 ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் பல்கலைக் கழக மானியக் குழுவின் இடத்தில் இந்திய உயர் கல்வி ஆணையத்தை உருவாக்கி வைக்கும் முயற்சி, நரேந்திர மோடி அரசு பதவிக்கு வந்தது முதல் உயர்கல்வி மீது நேரடி யாகவும், மறைமுகமாகவும்  திட்டமிட்டு நடத்தப்பட்டு வரும் உச்சநிலைத் தாக் குதலுக்கு சாட்சியாக அமைந்துள்ளது.)

இந்தியில் கில்வாட் என்று ஒரு சொல் இருக்கிறது. முன்யோசனையற்ற, விளைவுகளைப் பற்றி சிந்திக்காத முறையில், பொறுப்பற்ற தன்மையில் செயல்படுவது என்ற சற்றேறக்குறைவான பொருளை அளிக்கும் சொல் அது.  என்றாலும் இந்த விளக்கம் எல்லாம் இந்த சொல் பயன்படுத்தப்பட்டதன் முக்கியத்துவத்தை முழுவது மாகப் படம் பிடித்துக் காட்டுவதாக ஆகாது. கல்வித் துறையில், குறிப்பாக உயர் கல்வித் துறையில் இன்று மத்தியில் ஆட்சியில் இருக்கும் அரசு மிகச் சரியாக இதனைத்தான் செய்து வருகிறது. இந்திய உயர்கல்வி ஆணையம் (பல்கலைக் கழக மானியக் குழு கலைப்பு) சட்டம் 2018 இன் கீழ், 62 ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் பல்கலைக் கழக மானியக் குழுவைக் கலைத்து விட்டு அதனிடத்தில் இந்திய உயர் கல்வி ஆணையம் என்ற அமைப்பை உருவாக்குவதற்கான இந்த நடவடிக்கை, இந்த அரசு ஆட்சிக்கு வந்தது முதல் உயர்கல்வியின் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கொண்டு வரும் திட்டமிடப்பட்ட தாக்குதல்களின் உச்ச நிலைக்கு சாட்சியாக விளங்குகிறது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பல்வேறு பட்ட அமைப்புகளாலும், சங்பரிவார இதர அமைப்புகளாலும்  மேற்கொள்ளப்படும்  மறைமுக நடவடிக்கைகள் தனிமைப் படுத்தப்பட்டவையாகவும், குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் அல்லது தனிப்பட்ட அமைப் புகளைப் பொருத்த அளவில் வரையறை செய்து கொள்ளப் பட்டவையாக இருப் பவையுமாகும். பகுத்தறிவுக்கு ஒவ்வாததும், அறிவியலுக்கு ஏற்புடையவை அல்லாத துமான வாதங்களை,  அறிவியல் மனப் பான்மை பற்றி சிறிதளவும் அக்கறையோ, மரியாதையோ இல்லாத முறையிலும், இந்தியாவின் புகழ் பெற்ற பண்டைய கால வரலாறு பற்றிய பொய்களையும் அமைச் சர்கள், ஆளுங்கட்சியினர், மற்ற இந்துத் துவக் கோட்பாட்டாளர்களாலும்  பிரச் சாரம் செய்யப்பட்டு வருவதையும்,  பசு அறிவியல் பற்றிய ஒரு தேசிய செயல்திட்டம் திணிக்கப் படுவதையும், முக்கியமான கொள்கை முடிவுகளை எடுக்கும் முக்கியமான அமைப்புகளின் தலைவர்களாகவும், உறுப்பினர் களாகவும், கல்விக் குழுக்களிலும் சங் பரிவாரக் கோட்பாட்டு ஆதரவாளர்களை அரசு துணிவுடன் வெளிப்படையாக நியமித்து வருவதையும், அறிவியல் துறைகளும், அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சிலும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று  ஆர்.எஸ்.எஸ்.சின் முன்னணி அமைப்பான விஞ்ஞான பாரதி கட்டளை இட்டுக் கொண்டி ருப்பதையும், தேசிய இளைஞருக்கு அதிகாரம் அளிக்கும் தேசிய திட்டத்தின் மூலம் நாட்டுப் பற்றை மக்கள் மனதில் பதியச் செய்வதற்காக ஓர் இயக்கத்தைத் தொடங்குவது பற்றிய செயல்பாடுகளையும், நாம் பார்த்துக் கொண்டு தான் இருக் கிறோம்.

இவைகளைப் போலல்லாமல்,  40,000 கல்லூரிகளையும், 800 பல்கலைக் கழகங்களையும் தனது கட்டுப்பாட்டுக் கண்ணோட்டத்தில் உள்ளடக்கிய பல்கலைக் கழக மானியக் குழுவின் கீழ் இருக்கும் இந்திய உயர் கல்வி நிறுவனங்களுக்கு  மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது இந்த கல்வி ஆணையத் திட்டம் என்பதாலும்,  நாடு முழுவதிலும் இந்த நிறுவனங்களில் கல்வி பயில சேர்ந்துள்ள கோடிக் கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தையும் இது பாதிக்கும் என்பதாலும், இந்தியக் கல்வி நடைமுறையில் கல்வி பயில்வதற்கான சமத்துவம் மற்றும் வாய்ப்புகள் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற மாபெரும் அரசமைப்புச் சட்ட நோக்கங்களைக் கெடுப்பதாக இருப்பதாலும், தற்போது கொண்டு வரத் திட்டமிடப் பட்டுள்ள இந்திய உயர்கல்வி ஆணைய சட்டத்திற்கு  கண்டனங்களும், விமர்சனங்களும், எதிர்ப்புகளும் மிகமிக அதிகமான எழுந்துள்ளன.

பல்கலைக் கழக மானியக் குழுவிற்கு பதிலாக வேறொரு புதிய கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக் குவது என்ற கருத்து ஒன்றும் புதியதாகத் தோன்றியுள்ள கருத்தல்ல. கோதாரி ஆணையம் (1964-66), தேசிய கல்விக் கொள்கை (1986), நடவடிக்கைக்கான செயல் திட்டம் (1992), தேசிய அறிவு ஆணையம் (2007) மற்றும் உயர்கல்விக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தி புத்துணர் வூட்டுவதற்கான யஷ்பால் கமிட்டி (2009) போன்ற பல்வேறு குழுக்கள் பல்வேறு நேரங்களில் இத்தகைய தொரு புதிய அமைப்பை உருவாக்கப் பரிந்துரைத்து அறிக்கைகளை அளித்துள்ளன. பல்கலைக் கழக மானியக் குழுச் சட்டம்  பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு உருவான அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி கவுன்சில், ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் போன்ற ஒவ்வொரு துறைக்கும் தனித் தனியே உருவாக்கப்பட்டிருக்கும் அமைப்புகள் அனைத்தையும் ஒரே ஒரு மாபெரும் அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதும்,  உயர் கல்வி கற்பது மற்றும் ஆய்வு  பற்றி ஒரு பல்துறை அணுகுமுறை தேவைப்படும் அளவில் கல்வி நடைமுறையில் ஏற்பட்டு வரும் விரைந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்வதும்தான், குறிப்பாக தேசிய அறிவு ஆணையம் மற்றும் யஷ்வந்த்பால் கமிட்டியின் அடிப்படை நோக்கமாகும்.

உயர்கல்வித் துறையில் சுதந்திரமான கட்டுப்பாட்டு அதிகார அமைப்பு என்றதொரு அமைப்பை உருவாக் குவதற்கு தேசிய அறிவு ஆணையம் பரிந்துரைத்த நிலையில்,  1986 முதல் 1991 வரை பல்கலைக் கழக மானியக் குழுவின் தலைவராக இருந்த பேராசிரியர் யஷ்வந்த் பால்,  அனைத்து பிரச்சினைகளையும் ஓரள வுக்கு ஒருங்கிணைந்த முறையில் நியாயமாக பரிசீலனை செய்த பின்னர், விவசாயம் மற்றும் மருத்துவம் நீங்கலான, ஆய்வு உள்ளிட்ட இதர உயர்கல்வித் துறை அமைப்புகள் அனைத்தையும், தன்னாட்சியின் அடிப்படைக் கொள் கைகளில் சமரசம் செய்து கொள்ளாமல்,  கட்டுப் படுத்துவதற்காக உயர்கல்வி மற்றும் ஆய்வுக்கான தேசிய ஆணையம் என்ற அரசமைப்பு சட்டப்படியான தொரு  அமைப்பை உருவாக்குவதற்கு பரிந்துரைத்திருந் தார். அரசியல் குறுக்கீடுகளுக்குப் பணியாமல், ஜனநாயக நடைமுறையில் செயல்படுவதாக  இந்த ஆணையம்  இருக்கும் என்றும், உயர்கல்வி பற்றிய அதன் அணுகுமுறையில், ஒரு கட்டுப்பாட்டு  அமைப்பின் மூலம் குறைந்த அளவில் கல்வியின் தரத்தைப் பேணி, கல்வி நிறுவனங்களிடையே, குறிப்பாக பல்கலைக் கழகங்களிடையே, பல்கலைக் கழக மானியக் குழு சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி, கல்வி மற்றும் ஆய்வுப் பணிகளையும் இந்த ஆணையம்  ஒருங்கிணைத்து மேம்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உயர்கல்வி மற்றும் ஆய்வு மசோதா என்றதொரு மசோதாவும் தேசிய உயர்கல்வி ஆணையத்தை உரு வாக்குவதற்காக நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப் பட்டது. ஆனால், இது பற்றி நாடாளுமன்ற நிலைக் குழு வெளிப்படுத்திய சில கவலைகள், பல்கலைக் கழக மானியக் குழு மற்றும் அகில இந்திய தொழிற்கல்வி கவுன்சில் தெரிவித்த கருத்துகள் பற்றிய ஆட்சேபங்கள், பல்கலைக் கழக அமைப்புகளின் எதிர்ப்பு, ஒரு சில கல்வியாளர்கள் தெரிவித்த சில பாதகமான விமர்ச னங்கள் காரணமாக, பா.ஜ.க. தலைமையிலான புதிய அரசு வாக்கெடுப்பு நடத்தி அந்த மசோதாவை நிறை வேற்றியிருக்க இயன்ற நிலையில்,  2014 செப்டம்பர் மாதத்தில் அரசு  அந்த மசோதாவைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. இவைகளுக்கு மாற்றாக தற்போதைய ஆட்சியாளர்கள் உருவாக்க எண்ணியுள்ள தேசிய கல்வி ஆணையம் மாறுபட்ட ஒரு விலங்காகும். அமைச் சரவையால் வெளியிடப்பட்ட சட்ட மசோதாவில்  இரண்டு விதமான பேச்சுகள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. பல்கலைக் கழகங்களுக்கும், மற்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அதிக அளவிலான தன்னாட்சி அளிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டிருந்தாலும், இந்திய தேசிய கல்வி ஆணையத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் மீது மிக அதிக அளவிலான கட்டுப்பாடுகளை அரசு கொண்டிருக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

(தொடரும்)

நன்றி: 'ஃப்ரண்ட் லைன்' 17-08-2018

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner