எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பஸ்ரா, செப்.10 ஈராக்கின் பஸ்ரா நகரில், அடிப்படை வசதிகள் கோரி அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, அந்த நகரிலுள்ள ஈரான் தூதரகம் தீவைத்துக் கொளுத்தப்பட்டது.

அந்த நகரில், குடிநீர் மாசுபாட்டால் 30,000 பேருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். அதையடுத்து, பொதுமக்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறி, ஏராளமானோர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 12 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து: 6 பேர் பலி

காத்மாண்டு, செப்.10 நேபாளம் நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் இருந்து ஆல்ட்டிடியூட் ஏர் என்னும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு ஹெலிகாப்டர் 6 பயணிகள் மற்றும் ஒரு விமானியுடன் நேற்று காலை 8 மணியளவில் புறப்பட்டு சென்றது.

சுமார் 20 மைல் தூரம் கடந்து சென்றதும் காத்மாண்டு விமான நிலையத்தில் உள்ள தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு அறையுடனான இணைப்பை அந்த ஹெலிகாப்டர் இழந்தது.

இந்நிலையில், தாடிங் - நுவக்கோட் மாவட்டங்களுக்கு இடையிலான காட்டுப்பகுதியில் அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாக அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர். இந்த ஹெலிகாப்டர் விபத்தில், ஜப்பான் நாட்டு பயணி உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர். ஒரே ஒரு பெண் பயணி மட்டும் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுறுசுறுப்பு மனிதர்கள்: உகாண்டா முதலிடம்

ஜெனீவா, செப்.10 உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில், உகாண்டா மக்கள் சுறுசுறுப் பானவர்கள் என, தெரிய வந்துள்ளது.

ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுறுசுறுப்பான மனிதர்கள் பற்றிய ஆய்வு, 168 நாடுகளில் நடத்தப்பட்டது. இதில் உகாண்டா முதலிடம் பெற்றுள்ளது.

உகாண்டாவாசிகள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கின்றனர். இங்குள்ள, 95 சதவீதம் பேர், உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.இந்தப் பட்டியலில், இந்தியா, 117ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் பெரும்பாலானோர் உடற்பயிற்சி செய்வ தில்லை.

இதனால், உடல் ரீதியாக மட்டுமின்றி, மனரீதியாகவும் மிக மந்த நிலையில் இருப்போர் அதிகம்.கடைசி இடம் பெற்றுள்ள குவைத் நாட்டில், 68 சதவீதம் பேர், உடற்பயிற்சியை பற்றி நினைத்து கூட பார்ப்பதில்லை.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner