எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, செப்.10 நாட்டின் ஏற்றுமதியை மேம்படுத்த, கடன் காப்பீட்டு வசதியை தாராளமாக வழங்க வேண்டும் என, இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு கூட்ட மைப்பு வலியுறுத்தியுள்ளது.

இக்கூட்டமைப்பின் தலைவர், கணேஷ் குப்தா கூறியதாவது:

ஏற்றுமதியாளர்கள், பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். அவர்களின் இழப்பீடு கோரிக் கைகளை முழுவதுமாக நிரா கரிக்காமல், விரைந்து தீர்வு காண வேண்டும். அவ்வாறு நட வடிக்கை எடுக்க, ஏற்றுமதி கடன் உறுதி கழகத்திற்கு உத்தரவிட வேண்டும் என, மத்திய வர்த்தக அமைச்சகத்தை கேட்டுள்ளோம்.

ஏற்றுமதியை ஊக்குவிக்க, கடன் காப்பீடு அவசியம். ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான ஏற்றுமதிக்கு, தாராளமாக கடன் காப்பீடு வசதி வழங்க வேண்டும். இதனால், அந்நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

வெளிநாடுகளில், அரசியல் மற்றும் வர்த்தகப் பிரச்சினைகளால், பணம் வராமல் பாதிக்கப்படும் ஏற்றுமதியாளர்களுக்கு, கடன் காப்பீடு திட்டம் உதவுகிறது.

இந்த வசதியை, ஏற்றுமதி கடன் உத்தரவாத கழகம் வழங்கு கிறது.

குறு, சிறு, நடுத்தர நிறுவ னங்களின் ஏற்றுமதியை அதி கரிக்க, இக்கழகத்திற்கு, மத்திய அரசு, சமீபத்தில், 2,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.


தொழில்நுட்ப வடிவமைப்பு போட்டி

சென்னை, செப்.10 ஒவ் வொரு ஆண்டும், நூதனம், தொழில் நுட்பம், வடிவமைப்பு மற்றும் படைப்புத்திறனை முன் னிறுத்தும் திட்டங்களுக்கு வடி வமைப்பு விருது வழங்கப்படு கிறது.

இந்த ஆண்டின லெக்ஸ் சஸ் (லிணிஙீஹிஷி) விருதுக்கான விண் ணப்பங்கள் வரவேற்கப்படு கிறது. விண்ணப் பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 28.

இதுகுறித்து லெக்ஸஸ் இந்தியா நிறுவன தலைவர் பி.பி. வேணுகோபால் கூறுகையில்:

உலகளாவிய படைப்பளர் களின் சிறந்த படைப்புகள் , திட்டங்கள் மற்றும் பொருள்களை சமர்பிக்க அழைக்கப்படுகி றார்கள்.

போட்டி பதிவுகள் போட்டி குழுவினரால் பரிசீலிக்கப் பட்டு, முன் அனுபவமுள்ள கல்வியா ளர்கள், முக்கிய பத்திரி கைத்துறை உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட செல்வாக்குள்ள நடுவர் குழுவி னரால் அநாம தேயமாக மதிப்பீடு செய்யப்படும்.

வடிவமைப்பு போட்ட 2019 நாளைய இந்தியாவின் வளர்ச் சிக்கான வடிவமைப்பு  என்ற தலைப்பில் அமையும். இந்தியா போட்டியின் விருதுகள் 7 வகையில் வழங்கப்படும். வடி வமைப்பு போட்டிக்கான பரிசு என்பது ஆர்வத்தைத் தூண்டும் பல பரிசுகளை உள்ளடக்கியது.

தயாரிப்பு வடிவமைப்பு. பர் னிச்சர் வடிவமைப்பு, பேக்கேஜிங் வடி வமைப்பு, டெக்ஸடைல், கிராப்ட், புதிய எண்ணங்களுடன் வடி வமைப்பு, வாடிக்கை யாளருக்கு உபயோகப்படும் வடிவமைப்பு, சமுதாய மாற்றம் மற்றும் வர்த்தக விரிவாக்கத்திற் கான வடிவ மைப்பு போன்ற தலைப்புகளில் போட்டி இருக்கும். வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கி  சிறப்பிக்கபடுவார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner