எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, செப். 10- திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடை பெற்ற 58ஆவது மாநிலக் காவல் விளையாட்டுப் போட்டிகளில் ஒட்டுமொத்த வாகையர் பட் டத்தை தெற்கு மண்டலம் கைப் பற்றியது.

மத்திய மண்டலக் காவல் துறையால் ஒருங்கிணைத்து நடத்தப்படும் 58 -ஆவது மாநிலக் காவல் விளையாட்டுப் போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் கடந்த 6 ஆம் தேதி தொடங்கின. தெற்கு, மேற்கு,வடக்கு மற்றும் மத்திய மண்டலம், ஆயுதப்படை, சென்னை மாநகரக் காவல் துறை, கமாண்டோ படையைச் சேர்ந்த 650 வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்றனர். கூடைப்பந்து, கால்பந்து, கைப் பந்து, கையெறிப்பந்து, கபடி ஆகிய 5 பிரிவுகளில் குழுப் போட்டிகள் நடைபெற்றன.

ஒட்டுமொத்தமாக போட்டி களில் பெற்ற வெற்றியின் அடிப் படையில் 35.5 புள்ளிகளைப் பெற்று தெற்கு மண்டலம் முத லிடத்தையும், 33.5 புள்ளிக ளைப் பெற்று மத்திய மண்ட லம் இரண்டாவது இடத்தையும் கைப்பற்றியது. அதே நேரத்தில் பெண்கள் பிரிவில் மத்திய மண்டலம் முதலிடத்தை கைப் பற்றியதாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சனிக் கிழமை மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு மத்திய மண்டல காவல்துறைத் தலை வர் வி.வரதராஜு தலைமை வகித்தார்.

திருச்சி மாநகரக் காவல் ஆணையர் முனைவர் அ. அமல் ராஜ் விழாவில் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுகளை வழங்கிப் பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner