ஜெயங்கொண்டம், செப். 10- இந்திய பள்ளிகளுக்கான விளை யாட்டுக் குழுமம் நடத்தும் மாநில அளவிலான வலைப் பந்து தெரிவு போட்டிகள் 6.9.2018 அன்று ஜெயங்கொண்டத்தில் உள்ள அன்னை தெரசா மெட் ரிக் பள்ளியில் நடைபெற்றது.
பெண்களுக்கான போட்டி கள் 14 வயதிற்குட்பட்ட, 17 வயதிற்குட்பட்ட, 19 வயதிற் குட்பட்ட ஆகிய பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவி தேர்வு போட் டிகளில் கலந்துக்கொண்டு 17 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் பதினோறாம் வகுப்பைச் சேர்ந்த குழலி தமிழ்நாடு அணிக்காக விளையாட தேர்வு செய்யப் பட்டார்.
போட்டிகள் 17 வயதிற்குட் பட்ட பிரிவுகளுக்கு சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற இருக் கின்றது. தேசிய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவி யும் மற்றும் பயிற்றுவித்த உடற் கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ், ரவிசங்கர் ஆகியோர்களை பள்ளி தாளாளர், முதல்வர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் உட்பட பலர் வாழ்த்தினர்.