எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கரூர், செப்.9 -அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் இணைந்து சந்திரனில் நிரந்தர ஆய்வு மய்யம் அமைக்கவுள்ளது என்றார் இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை.

கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற “நிலாவில் ஒரு உலா’ என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியது:

சந்திரனுக்கு முதன்முதலில் நீல் ஆம்ஸ்ட்ராங் சென்றாலும், சந்திரனில் தண்ணீர் இருப்பதை முதன்முதலாக இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட சந்திரயான்-1 செயற்கைக் கோள்தான் கண்டறிந்தது.

இதன் பின்னரே சர்வதேச அளவில் சந்திரனில் ஆய்வு முக்கியத்துவம் பெற்றது.

சந்திரயான்-2 திட்டத்தின் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளோடு இந்தியாவும் கூட்டு சேர்ந்து சந்திரனில் நிரந்தர ஆய்வு மய்யம் அமைக்கத் திட்டமிட்டு வருகிறது. இந்தத் திட்டம் இன்னும் 10 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.

கல்வி நிலையங்களை அங்கீகரிக்கும்

பணியில் அய்அய்டி, அய்அய்எம்

புதுடில்லி, செப்.10 கல்வி நிலையங்களை அங்கீகரிக்கும் பணியில் அய்அய்டி, அய்அய்எம் போன்ற நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

தற்சமயம், கல்வி நிலையங்களின் தரத்தை வைத்து அவற்றுக்கு அங்கீகாரம் அளிக்கும் பணிகளை மேற்கொண்டு வரும், தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் கவுன்சில் (என்ஏஏசி), தேசிய அங்கீகார வாரியம் (என்பிஏ) ஆகியவற்றை மேலும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது என்று அவர் கூறினார்.

டில்லியில், கல்வி நிறுவன அங்கீகார சர்வதேச மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின், செய்தியாளர் களிடம் ஜாவடேகர் கூறியதாவது:

உயர்கல்வி நிலையங்களின் அங்கீகார பணிகளை விரைபடுத்தும் நோக்கில், மத்திய அரசு பயன்படுத்திக் கொள்ளும் வகையிலான அமைப்பு ஒன்றை ஏற்படுத்துமாறு அய்அய்டி, அய்அய்எம் ஆகிய நிறுவனங்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இனி கற்றலினால் விளைந்த பயன்கள், கல்வியின் தரம் ஆகியற்றை பிரதான காரணங்களாகக் கொண்டே எந்தவொரு நிறுவனத்தின் தரமும் நிர்ணயம் செய்யப்படும். கல்வி நிறுவனங்களுக்கான அங்கீகாரத்தை பரிசீலிக்கும்போது, கற்றல் வெளிப்பாட்டு பயன்களின் அடிப்படையில் 80 சதவீத தர மதிப்பெண்கள் வழங்கப்படும். கல்வி நிலைய வளாகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவை செயற்கைகோள் துணையுடன் ஆய்வு செய்யப்படும்.  எந்தவொரு கல்வி நிறுவனம் தரத்தை நிலைத்திருக்கச் செய்கிறதோ, அது மட்டுமே இனி செயல்பாட்டில் இருக்க முடியம். தர நிர்ணயத்தில் தோல்வி அடையும் நிறுவனங்கள் களத்தில் இருந்து வெளியேற வேண்டியிருக்கும் என்றார் ஜாவடேகர்.  நாட்டில் தற்போது 15 சதவீத கல்வி நிறுவ னங்கள் மட்டுமே அங்கீகாரம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner