எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பூவிருந்தவல்லி,செப்.11பூவிருந் தவல்லியை அடுத்த குமணன் சாவடி மேட்டு தெருவைச் சேர்ந்தவர் வசந்தா (60). இவ ருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

மூத்த மகள் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்கிறார். 2- ஆவது மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இதனால் மனவேதனையில் இருந்த வசந்தா மேல்மலையனூர்  கோவிலுக்குச் சென்றார். அப் போது அங்கு பாபு என்பவர், தான் சாமியார் என்றும் குடும்ப பிரச்சினை தீர வீட்டில் பூஜை செய்யவேண்டும் என்றும் வசந் தாவிடம் கூறினார்.

இதை நம்பிய வசந்தா சாமியார் பாபுவை வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது பூஜை செய்ய நகை-, பணம்வேண் டும் என்று சாமியார் கூறினார்.

இதையடுத்து வசந்தா வீட் டில் இருந்த 15 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணத்தை அவரிடம் கொடுத்தார். அப்போது பூஜை செய்து கொண்டிருந்த சாமியார் நகை, -பணத்துடன் காணாமல் போனார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தாபூவிருந்தவல்லிகாவல் நிலையத்தில்புகார்செய்தார். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சாமியார் பாபுவை தேடி வந்தனர். மேல் மலையனூரில் பதுங்கி இருந்த சாமியாரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 11 பவுன் நகை மீட்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner