எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காங்கயம் வி.சி.க கூட்டத்தில் தீர்மானம்

காங்கயம், செப். 11-- தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்து காங்கயத்தில் நடை பெற்ற வி.சி.க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் காங்கயம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காங்கயம்,வெள்ளகோவில்,முத்தூர் பகுதிப் பொறுப்பாளர் களின் அறிமுகக் கூட்டம் காங்கயத்தில் தாராபுரம் சாலையிலுள்ள வி.சி.க சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு காங்கயம் சட்டமன்றத் தொகுதி வி.சி.க செயலாளர் ரா.பி.ஜான்நாக்ஸ் தலைமை தாங்கினார்.காங் கயம் ஒன்றிய வி.சி.க மகளிரணியைச் சார்ந்த நித்யா அனை வரையும் வரவேற்றார். வி.சி.க மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆற்றலரசு, உதயகுமார், ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் திருப்பூர் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் செயலாளர் நா.தமிழ்முத்து அவர்கள் பங் கேற்று சிறப்புரையாற்றினார்.

தீர்மானங்கள்:

1) எதிர்வரும் 17.09.2018 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் காங்கயம், வெள்ளகோவில், முத்தூர், நத்தக் காடையூர் ஆகிய பகுதிகளில் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை எழுச்சியோடு கொண்டாடுவது என தீர்மானிக் கப்பட்டது.

2)காங்கயம் அரசுமருத்துவமனையில் நிலவிவரும் மருத் துவர்கள் பற்றாக்குறை மற்றும் கழிப்பிட,குடிநீர் வசதி யின்மை ஆகிய குறைபாடுகளை சரிசெய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

3) காங்கயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தை ஆக்கி ரமித்துள்ள கோவிலை அரசாணையின்படி அகற்ற வேண்டு மெனவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நூலகம் மற்றும் கழிப்பிட வசதி ஏற்படுத்தி  தரவேண்டுமெனவும் வலியுறுத் தப்பட்டது. 4) சிறுபான்மையர்களான முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள் ஆகியோருக்கு எதிராக காங்கயம் வட்டப் பகுதிகளில் தொடரும் வன்முறைச் சம்பவங்களுக்கு கூட்டத்தில் கடுங் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வன்முறையாளர்களை இரும் புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமென மாவட்ட காவல் துறையை வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்வில் தாராபுரம், காங்கயம், வெள்ளகோவில், முத்தூர், நத்தக்காடையூர் ஆகிய பகுதிகளிலிருந்து 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner