எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப். 11- பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண் டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்து கட்சிகள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை சேப்பாக்கம் விருந் தினர் மாளிகை அருகே நேற்று (10.9.2018) நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநா வுக்கரசர் தலைமை தாங்கினார்.

முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், துணைத்தலை வர் எச்.வசந்தகுமார், மாநில பொதுச்செயலாளர் தணிகாச லம், ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா, மாவட்ட தலை வர்கள் கராத்தே தியாகராஜன், எம்.எஸ்.திரவியம், சிவராஜ சேகரன், வீரபாண்டியன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

தி.மு.க. சட்டப்பிரிவு செய லாளர் வக்கீல் கிரிராஜன், ம. தி.மு.க. துணைபொதுச் செய லாளர் மல்லை சத்யா, சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர் ணாவூர் நாராயணன், சமத்துவ மக்கள் கட்சியின் பொருளாளர் எம்.ஏ.சுந்தரேசன், திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், அகில இந்திய முஸ்லிம் லீக் முன்னாள் எம்.பி. அப்துல் ரகுமான், மனி தநேய மக்கள் கட்சி தேசியக் குழு உறுப்பினர் குணங்குடி அனீபா, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொருளாளர் ஹாரூண் ரஷீது, எஸ்.டி.பி.அய். கட்சியின் மாநில செயலாளர் உமர் பாரூக் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் திருநாவுக்கரசர் பேசியதாவது:-

அனைத்து கட்சி சார்பில் பாரத் பந்த் வெற்றிகரமாக நடந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை எட்டும் வகையில் தினசரி 30 காசுகள், 50 காசுகள் என்ற விகிதத்தில் உயர்ந்துவருகிறது. இலங்கை, பாகிஸ்தான் உள் ளிட்ட அண்டைநாடுகளில் பெட்ரோல் விலை குறைவாக உள்ளது. இந்தியாவிலும் 35 முதல் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட வேண்டிய பெட் ரோல், டீசல் 2 மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப் படுகிறது.

கச்சா எண்ணெய் 140 டாலராக இருந்தது, தற்போது 65 டாலருக்கு விற்பனை செய் யப்படுகிறது. எனினும் இந்த பயனை மக்கள் அடையாமல் எண்ணெய் நிறுவனங்களும், மத்திய அரசும் பயன் அடைந்து வருகின்றன. இதன்மூலம் சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் பொதுமக்களிடம் இருந்து சுரண் டப்பட்டுள்ளது. இதனால் மக்கள் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பா.ஜனதா பினாமி ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. எனவே, மத்தியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையிலும், மாநிலத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையி லும் ஆட்சி மாற்றம் கொண்டு வருவோம். அதற்கு அஸ்தி வாரமே இந்த பந்த்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner