எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொச்சி, செப். 11- முன்னாள் ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையில் கேரள அனைத் துக்கட்சி எம்.பி.க்கள் குழுவி னர் நேற்று டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து, மாநிலத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து பேச திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் பிரதமரை சந்திக்க தங்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டு விட்டதாக அகில இந் திய காங்கிரஸ் பொதுச் செயலா ளரும், ஆலப்புழா தொகுதி எம்.பி.யுமான கே.சி.வேணு கோபால் நேற்று கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகை யில் குற்றம்சாட்டினார். பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கோரி அவரது அலுவலகத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி கடி தம் கொடுத்ததாகவும், ஆனால் பின்னர் அந்த கடிதம் அங்கி ருந்து உள்துறை அமைச்சகத் துக்கு அனுப்பப்பட்டு, கேரள எம்.பி.க்களை சந்திக் குமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டதாகவும் கே. சி.வேணுகோபால் கூறினார்.

கேரள எம்.பி.க்கள் குழு ஏற்கனவே ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசியுள்ள நிலையில், மீண்டும் அவரை சந்தித்து பேசுவதில் அர்த்தம் இல்லை என்றும் அப்போது அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner