எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜகார்தா, செப். 11-  இந்தோனேசியாவில் சுற்றுலாப் பயணி களை ஏற்றி வந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலியாகினர்.

இந்தோனேசியாவின் முக்கியமான தீவுகளில் ஒன்று ஜாவா.  இங்கு மேற்கு ஜாவா பகுதியில் உள்ள சுகாபூமி மாவட்டத்தில், சுற்றுலாத்தலம் ஒன்றுக்கு செல்லும் பொருட்டு தனியார் நிறுவனத்தின் ஊழியர்களை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

வளைவான பாதையில் சென்ற போது திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலை அருகி லுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 21 பேர் சம்பவ இடத் திலே பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரி விக்கின்றன.

விபத்து குறித்த தகவல் அறிந்து உடன் அங்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர், பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் மேலும் 9 பேர் படுகாயமடைந்துள்ளன தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

உலக நாடுகள் மியான்மா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்: சேக் ஹசினா

டாக்கா, செப். 11- வங்காளதேசத்தில் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் கிளை திறப்பு விழா தலைநகர் டாக்காவில் நேற்று நடைபெற்றது. திறப்பு விழாவில் பங்கேற்று பிரதமர் சேக் ஹசினா உரையாற்றினார். அப்போது அவர் குறிப்பிட்டு உள்ளதாவது:-

ரோகிங்யா அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதால் வங்காளதேசத்தின் வளங்கள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், அது உள்ளூர் மக்களிடம் எதிர்மறை தாக்கத்தை உண்டாக்கும் என்பதை தெரிந்தும் நாங்கள் மனிதாபிமான அடிப்படையில் அகதிகளுக்காக எல்லையை திறந்து விட் டோம். லட்சக்கணக்கான அகதிகள் தங்குவதற்கு வசதியாக முகாம்கள் அமைத்து கொடுத்தோம்.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 7 லட்சத்திற்கும் மேலான அகதிகள் மியான்மாவில் இருந்து வங்காளதேசத்திற்கு வந்து உள்ளனர். அவர்களை பராமரிக்க வங்காளதேச அரசுக்கு சிரமமாக உள்ளது. இப்போது மியான்மாவில் சுமூக நிலை திரும்பியுள்ளதால் அகதிகள் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். எனவே ரோகிங்யா அகதிகள் மீண்டும் தாயகம் திரும்ப உலக நாடுகள் அனைத்தும் மியான்மா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

வங்களதேசம் மற்றும் மலேசியாவில் உள்ள அகதிகள் இரண்டு மாதத்தில் மீண்டும் நாடுதிரும்ப கடந்த நவம்பர் மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் அதில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner