எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜெயங்கொண்டம், செப். 11- பள்ளிக் கல்விதுறை சார்பில் உடையார்பாளையம்  கல்வி மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி 7.9.2018 அன்று ஜெயங்கொண்டத்தில் உள்ள பிரணாவ் பேட்மிட்டன் கிளப் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

போட்டிகள் 14 வயதிற்குட் பட்ட 17 வயதிற்குட்பட்ட மற் றும் 19 வயதிற்குட்பட்ட ஒற் றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர். ஜெயங் கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் ஒற்றையர் பிரிவு 14 வயதிற்குட்பட்ட யோகிதா முதலிடத்தையும், 19 வயதிற் குட்பட்ட அனுஷா முதலிடத் தையும், ஆண்கள்  ஒற்றையர் பிரிவு 17 வயதிற்குட்பட்ட ஆத்மராம் முதலிடத்தையும், பெண்கள் இரட்டையர் பிரிவு 14 வயதிற்குட்பட்ட யோகிதா, அனுஷ்யா  இரண்டாமிடத்தை யும், 19 வயதிற்குட்பட்ட அனுஷா, பிரியங்கா முதலிடத்தையும், ஆண்கள் இரட்டையர் பிரிவு 14 வயதிற்குட்பட்ட மணிகண் டன், சஞ்சய்  இரண்டாமிடத் தையும் 17 வயதிற்குட்பட்ட பிரித்வி, அபினேஷ் இரண்டா மிடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்கள். இதில் 17 வயதிற்குட்பட்ட ஆத்மராம், 19 வயதிற்குட்பட்ட அனுஷா, பிரியங்கா மண்டல போட் டிக்கு தகுதி பெற்றனர். போட் டியில் வென்ற வீரர்கள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ், ரவி சங்கர் ஆகியோர்களை பள்ளி தாளாளர், முதல்வர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற் றோர்கள் உட்பட பலர் வாழ்த் தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner