எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கால்பந்துக்கு எப்படி பிரேசிலோ அதே போன்று ஹாக்கிக்கு பிரசித்திப் பெற்றது இந்தியா. ஒரு ரோபோவைப் போல் திட்டமிட்டபடி ஆடாமல், தேசிய விளையாட்டான ஆக்கியைத் தங்கள் உள்ளு ணர்வுக்கேற்ப இயல்பாக விளையாடும் நம்மவர்களின் ஆட்டத்தில் ஒரு ஜீவன் இருக்கும். ஆக்கியில் 1928இல் தொடங்கிய எழுச்சி மிகு ஆட்டம் 1980 வரை நீடித்துள்ளது.

ஒலிம்பிக்கில் 8 முறை தங்கம் வென்ற பெருமை இந்தியாவுக்கு மட்டுமே உண்டு. ஆக்கி மைதானத்தில் செயற்கைப் புற்களின் நுழைவுக்குப் பின், ஆக்கி ரோபோக்கள் ஆடும் செயற்கைத்தனமான ஆட்டமாக மாறியது.

இந்தியா ஆக்கி அணியின் பலத்தையும் நளினத்தையும் இந்தச் செயற்கைப் புற்கள் நீர்த்து போகச் செய்தன. இந்தியாவுடன் விளையாடவே பயந்த அணிகளிடம் இந்தியா படுமோசமாகத் தோல்வியடைந்தது. காலம் இப்போது மாறிவிட்டது என்பதை, இந்திய மகளிர் ஆக்கி அணி இன்று உலகுக்கு உரக்கச் சொல்லியுள்ளது.

21-0 என்ற கோல் கணக்கில் ஹாக்கியில் வெல்வது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதது. 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் கஜகஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி அதைச் சாதித்து காட்டியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner