எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புனே, செப். 11- மராத்தா சமுதாயத்தினர் போராட்டத்தினால் மாநிலமே வன்முறை களமானது. தங்கர் சமுதாயத்தினரும் தங்களை பழங்குடியின (எஸ்.டி.) பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அவர்களும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினார்கள்.

மராத்தா, தங்கர் சமுதாயத்தினரை தொடர்ந்து, மராட்டியத்தில் முசுலிம்களும் தங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு போராட முடிவு செய்தனர். அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி புனேயில் செப்டம்பர் 9-ஆம் தேதி முசுலிம்கள் பிரமாண்ட பேரணி நடத்தினார்கள். புனே லவஸ் சவுக் பகுதியில் இருந்து தொடங்கிய இந்த பேரணியில் ஏராளமான முசுலிம்கள் கலந்து கொண்டனர். முக்கிய சாலைகள் வழியாக அவர்கள் புனே ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தனர். பேரணி நிறைவில், அவர்கள் புனே ஆட்சியரை சந்தித்து இடஒதுக்கீடு தொடர்பான கோரிக்கை மனுவை அவரிடம் அளித்தனர்.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் ஏற்பட்ட பாதிப்பு

கடன்மதிப்பு ரூ.68 ஆயிரம் கோடி அதிகரிப்பு

புதுடில்லி, செப். 11- ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால், இந்தியா வெளி நாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை, 68 ஆயிரத்து 500 கோடி அளவிற்கு அதிகரித் துள்ளது. அமெரிக்க டாலருக்கு இணையானஇந்திய ரூபாய் மதிப்பு 72 ரூபாய் அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இது வரலாற்றில் இதுவரை ஏற்படாதமோசமான வீழ்ச்சியாகும்.

நடப்பாண்டில் மட்டும் 11 சதவிகிதம் அளவிற்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது.கச்சா எண்ணெய் விலை உயர்வுதான் இதற்கு காரணம் என்று மோடி அரசு கூறினாலும், உண்மையில் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம் உள்ளிட்டவையே பிர தான காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறிவருகின்றனர்.ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, விலைவாசிஉயர்வு உட்பட பல்வேறு விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இந்திய அரசு வெளிநாடுகளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகையிலும் மிகப்பெரிய உயர்வை ஏற்படுத்தி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது, இந்தியா வெளிநாடுகளிடம் வாங்கியுள்ள கடனை டாலரிலேயே திருப்பிச்செலுத்த வேண்டும் என்ற நிலையில், தற்போது டாலர் மதிப்பு உயர்வுக்கு ஏற்ப, ரூ. 68 ஆயிரத்து 500 கோடியை கூடுதலாக செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இதுவும் கூட, டாலர் மதிப்பு 72 ரூபாயிலேயே நிலைகொண்டிருந்தால் மட்டும்தான். 72 ரூபாயைத் தாண்டினால், கடன்மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லு நர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆசிரியருக்கான பி.எட்., சேர்க்கை துவக்கம்

சென்னை, செப். 11- பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான, பி.எட்., சேர்க்கையை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை அறிவித்துள்ளது.

தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்று, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., படிப்புக்கான சேர்க்கை நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை,  வெளியிட்டது.இந்த படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், 11ஆம் தேதி முதல் கிடைக்கும். இந்த படிப்பில் சேர, பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிபவர்களாகவும், குறைந்தபட்சம், ஒரு பட்ட படிப்பும், 'டிப்ளமா' ஆசிரியர் கல்வியியல் படிப்பும் முடித்திருக்க வேண்டும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner