எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உலக சுகாதார அமைப்பு தகவல்

நியூயார்க், செப். 12- தினமும் தற்கொலை செய்திகள் இல்லாத நாளிதழ்களே இல்லை என்று கூறும் அளவுக்கு அற்ப கார ணங்களுக்கெல்லாம் தற்கொலை நிகழ்வுகள் அசாதாரணமாகி விட்டது. தனிமை, புறக்கணிப்பு, பயம், கவலை, வறுமை, குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, விரக்தி போன்ற வையே தற்கொலை செய்துகொள்வதற்கான முக்கியக் கார ணங்களாக உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10-ஆம் தேதி தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி, பல்வேறு பொதுநல இயக்கங்கள் தற்கொலை எதிர்ப்பு பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள அறிக்கையின் படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழ்மை மற்றும் நடுத்தர வர்க்க நாடுகளில்தான் தற்கொலை கள் அதிகம் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக அழுத்தங்கள், ஏற்றத்தாழ்வுகளும் ஒருவரது தற்கொலைக்கு தூண்டுதலாக உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரட்டை கோபுர தாக்குதல் சேதமடைந்த சுரங்க ரயில்நிலையம் 17 ஆண்டுகளுக்கு பிறகு திறப்பு

நியூயார்க், செப். 12- கடந்த 2001ஆ-ம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அல் கொய்தா தீவிர வாதிகள் இரட்டை கோபுரத்தின் மீது விமானத்தை மோதி தாக்குதல் நடத்தினார்கள். அதில் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

இரட்டை கோபுரங்கள் இடிந்து விழுந்தபோது அதன் அருகே இருந்த சுரங்க ரயில் நிலையமும் பலத்த சேதம் அடைந்தது. பல இடங்கள் மண்ணுக்குள் புதைந்துவிட்டன. இதனால் அந்த ரயில் நிலையம் மூடப்பட்டது.

இந்த சூழ்நிலையில் கடந்த 2015ஆ-ம் ஆண்டு முதல் இந்த ரயில் நிலையம் சீரமைக்கும் பணியில் மெட்ரோ பாலிட்டன் போக்குவரத்து ஆணையம் ஈடுபட்டது. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் அந்த ரயில் நிலையம் 17 ஆண்டு களுக்கு பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. அங்கு மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. அதை மக்கள் கைதட்டி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். ரயில் ஓடுவதை போனில் படம்பிடித்து சமூக வலை தளங்களில் வெளியிட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner