எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இசுலாமாபாத், செப். 12- பாகிஸ் தான் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்றுள்ளார். இந்த நிலையில் பாகிஸ்தானின் நிதிநிலை குறித்தும் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்தும் பொரு ளாதார ஆலோசகர்கள் கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு இம்ரான் கான் தலைமை தாங்கினார். நிதி அமைச்சர் ஆசாத் உமர் மற்றும் 15 நிதி ஆலோசகர்கள் கலந்து கொண்டனர். அப்போது வெளிநாடுகளில் இருந்து பொருட் களை இறக்குமதி செய்வதால் அதிக அளவில் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது.

இதனால் டாலர் பற்றாக் குறை ஏற்பட்டு பொருளாதார சிக்கல் உருவாகி உள்ளது. அதை சரிகட்ட சர்வதேச நிதி ஆணையத்திடம் இருந்து நிதி உதவி பெறலாம் என தெரிவிக் கப்பட்டது.

ஆனால் இதை பிரதமர் இம்ரான்கான் விரும்பவில்லை. நாடு யாரையும் சார்ந்து இருக்க கூடாது என அவரும், கட்சி நிர்வாகிகளும் பேசி வருகின் றனர்.

எனவே, சர்வதேச நிதி ஆணையத்தின் உதவியை நாடாமல் பொருளாதார நெருக் கடியை சமாளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் படி ஆடம்பர கார்கள், ஸ்மார்ட் போன்கள், பாலாடைக்கட்டி மற்றும் பழ வகைகளை ஒரு ஆண்டுக்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

தற்போதுள்ள சூழ்நிலை யில் பாகிஸ்தானில் ரூ.66 ஆயி ரம் கோடி பற்றாக்குறை உள் ளது. ஆடம்பர பொருட்கள் இறக்குமதியை தடை செய்வ தன் மூலம் ரூ.33 ஆயிரம் கோடி பற்றாக்குறையை சரிகட்ட முடி யும் என கணக்கிடப்பட்டுள்ளது.

உயர் பாதுகாப்பு சிறையிலிருந்து 100 கைதிகள் தப்பியோட்டம்!

பிரேசில், செப் 12- திங்களன்று பிரேசிலின் பரைபா மாகாணம், ஜாவோ பெசாயோ உயர் பாது காப்பு சிறையிலிருந்து ஒரே நேரத்தில் 100 கைதிகள் துப் பாக்கி முனையில் தப்பியோ டிய செயல் அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திங்களன்று முதலில் தப்பி யோடிய 105 கைதிகளிலிருந்து 33 பேரை சிறைக்காவலர்கள் மீண்டும் கைப்பற்றியதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நான்கு வாகனங்களில் பயங் கர ஆயுதங்களுடன் சிறைச்சா லைக்குள் திடீரென  நுழைந்த 20 பேர் கைகளில் ரைஃபிள்கள் வைத்திருந்ததோடு சிறைச் சாலையின் பாதுகாப்பு அதிகா ரிகள் இருந்த பகுதியை நோக்கி வெடிபொருட்களை வீசி வெடிக்கச் செய்தனர்.

அவர்களைத் தடுக்க முயன்ற சிறைக்காவலர்களை சுட்டுத் தள்ளி விட்டு சிறைச் சாலையின் கதவை இறுக மூடி அவர்களுக்குத் தேவையான 105 கைதிகளை விடுவித்துக் கொண்டு சென்றனர். சிறைச் சாலைக்கு வெளியே தப்பியோ டவிருக்கும் கைதிகளுக்காக காத்திருந்த அவர்கள் கூட்டத் தைச் சேர்ந்த மற்றொரு குழு சாலையில் பாதுகாப்புப் பணி யில் ஈடிபட்டிருந்த 36 வயதுக் காவலர் ஒருவரை தலையில் சுட்டுத் தள்ளியது.. உள்ளே கைதிகள் தப்பியதற்கும் வெளி யில் காவலர் சுட்டுக் கொல்லப் பட்டதற்கும் ஒரே தீவிரவாதக் கும்பலே காரணமாயிருக்கக் கூடும் என சிறைத்துறை அதி காரிகள் நம்பினர்.

உச்ச பட்ச கண்காணிப்பும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய் யப்பட்டுள்ள சிறைச்சாலையிலேயே இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதால் பொதுமக்க ளின் பாதுகாப்பு நலன் கருதி அப்பகுதியில் உள்ள கல்லூரி கள், மருத்துவமனைகள் மூடப் பட்டன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner