எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருப்பூர், செப். 12- பின்னலாடை உற்பத்தி இயந்திரங்கள் இறக்கு மதிக்கு வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் புதிய வரி விதிப்பை மத்திய அரசு அமல் படுத்த உள்ளதால் உற்பத்தியா ளர்கள் கவலை அடைந்துள்ள னர். பின்னலாடை உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட் களான பஞ்சு, நூல் ஆகியவற் றின் விலை அடிக்கடி அதிகரித்து வருவதால் உற்பத்தி செலவு உயர்ந்துள்ளது.

இந்நிலையில், பின்னலாடை உற்பத்தியாளர்கள் இறக்குமதி செய்யும் இயந்திரங்களுக்கு வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அய்.ஜி.எஸ்.டி. வரி செலுத்தும் நிலை ஏற்பட்டுள் ளது. இதுகுறித்து திருப்பூர் ஏற் றுமதியாளர் சங்க பொதுச் செயலாளர் விஜயகுமார் கூறிய தாவது:

மூலப்பொருட்கள் விலை அதிகரித்துள்ள நிலையில் பல் வேறு நெருக்கடியில் தொழில் செய்து வருகிறோம். ஏற்கெ னவே, பல சலுகைகள் குறைக் கப்பட்ட நிலையில் நவீன இயந்திரங்கள் மூலம் உற்பத்தி செலவை குறைக்கும் முயற்சி யில் ஈடுபட்டுள்ளோம்.

இந் நிலையில், பின்ன லாடை உற்பத்தியாளர்களுக்கு இ.பி.சி.ஜி.திட்டத்தின்  மூலம் இறக்குமதி செய்யும் இயந்திரங் களுக்கு வரி விலக்கு இருந்தது. தற்போது, வரும் அக்.1ஆம் தேதி முதல் இறக்குமதி செய் யும் இயந்திரங்களுக்கு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள் ளது. மத்திய அரசு தொடர்ந்து வரிச் சலுகை வழங்க வேண் டும் என்றார்.