எழுத்துரு அளவு Larger Font Smaller Font

போலந்து, செப். 12- போலந்தில் நடைபெற்று வரும் 13-ஆவது சைலிசியன் குத்துச்சண்டை வாகையர் பட்டப் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் வென்றார். வெல்டர்வெயிட் 69 கிலோ பிரிவில் லவ்லினா 4--1 என்ற புள்ளிக் கணக்கில் ரசியாவின் அசிசசாவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். லவ்லினா ஏற்கெனவே இந்தியா ஓபனில் தங்கம், உலன்பட்டார் கோப்பையில் வெண்கலம் வென்றார்.

ரிது கிரெவால் 51 கிலோ பிரிவில் 5--0 என்ற புள்ளிக் கணக் கில் போலந்தின் ரோசாவை வீழ்த்தினார். இந்தியா சார்பில் மேரி கோம் (48 கிலோ), சரிதா தேவி (60 கிலோ), சசி சோப்ரா (57 கிலோ), மனிசா (54 கிலோ) ஆகியோரும் இடம் பெற்று உள்ளனர். இப்போட்டியில் இங்கிலாந்து, கஜகஸ்தான், பிரான்சு, ஜெர்மனி, உக்ரைன் உள்பட 21 நாடுகளின் வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.


 

தேசிய வலுதூக்குதல்: தமிழக அணிக்கு 2 வெண்கல பதக்கம்

3ஆ-வது தேசிய மூத்தோர் வலுதூக்குதல் வாகையர் பட்டப் போட்டி சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்தது. இந்தியா முழுவதும் இருந்து 500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து 22 பேர் கலந்து கொண்டனர். இதில் தமிழக அணிக்கு 2 வெண்கல பதக்கம் கிடைத்தது. 93 கிலோ பிரிவில் சென்னை வீரர் எம்.நந்தகுமார் மொத்தம் 690 கிலோ தூக்கி 3-ஆவது இடத்தை பிடித்து வெண்கல பதக்கம் வென்றார்.