எழுத்துரு அளவு Larger Font Smaller Font

விவேகானந்தரின்125ஆம் ஆண்டையொட்டி, அமெரிக் காவின் சிகாகோ நகரில் உரை யாற்றிய  விவேகானந்தரின் உரையை  அமர்க்களப்படுத்திக் கொண்டு இருக்கின்றன ஆர்.எஸ்.எஸ். வகையறாக் கள்.

அதேநேரத்தில்,இதே விவேகானந்தர் கூறியுள்ள முக்கிய பல கருத்துகளையும் படுதா போட்டு மூடி மறைப் பதன்முகமூடியைக்கிழிக்க வேண்டியது நமது கடமை யாகும்.

இதோ அந்த விவேகா னந்தர் பேசுகிறார், கேண்மீர்:

மதச்சண்டைகளும்,ஜாதி வேற்றுமைக்கலகங்களும் பல்குவதற்கு ஒரு பெருங்கருவி யாய் இருந்ததும், இருப்பதும் சமஸ்கிருத மொழியேயாகும். சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போகுமானால், இப்போராட்டங்களும் தொலைந்து போகும்'' என்று வருந்திக் கூறினார் விவே கானந்தர்.

- மறைமலை அடிகளின் தமிழர் மதம்', பக்கம் 24

பூரி ஜெகந்நாதர் ஆலயம் பழங்காலத்தில் புத்தர் கோவி லாக இருந்தது.

- விவேகானந்தர்

(நூல்: இந்தியத் தாயின் பணிக்கு இளைஞர்களே வருக!'')

***

நான் ஆரியன், மற்றை யோர் மிலேச்சர் என்று எண் ணுகிற எண்ணம் அறியா மையிலிருந்து பிறந்தது. அறிவு விளக்கத்தின் வடிவமாம் வேதத்துக்குப் பாஷ்யகாரராய் விளங்குகின்றவரிடத்து வர் ணா சிரமப் பிரிவுகள் இருத்தல் தகுமா?''

***

புத்தருடைய துறவிக் கொள்கையை இந்து சம யம் கவர்ந்து கொண்டது. புத்தரைப் போன்ற துறவு வாழ்க்கையுடைய வேறு ஒரு மனிதன் இவ்வுலகத்தில் பிறக்கவில்லை.''

புராணங்களில் பலவும், மனுதர்மம் போன்றனவும், மகாபாரதத்தில் பெரும் பகுதி யும் பிற்காலத்தில் எழுந்தன. பகவான் புத்தர் அவற்றுக்கு முற்பட்டவர்.''

***

இந்நாள்களில் தாழ்ந்த வகுப்பார் வேலை நிறுத் தம் செய்யும் இயக்கம் எவ்வி டத்திலும் பரவி வருவது இதற்கொரு சான்றாகும். உயர்ந்த வகுப்பார் எவ்வளவு முயன்று பார்ப்பினும், தாழ்ந்த வகுப்பாரை இனி அடக்கி வைக்க முடியாது. தாழ்ந்த வகுப்பாருக்கு உரிமையாகிய நலன்களை அவர்கள் அடை யச் செய்வதே உயர்ந்த வகுப் பார் தாமும் நன்மை அடை வதற்குத் தகுந்த நெறியாகும்.''

(சுவாமி விவேகானந்தர் சம்பாஷணைகள்'' நூல்:

விவேகானந்தரைத்தூக் கிப் பிடிக்கும் இந்துத்துவாவாதி களே - விவேகானந்தரின் இந்தக் கூற்றுகளுக்கும், கருத்து களுக்கும் விடை கூறுவீர்களா?

- மயிலாடன்

குறிப்பு: ஆர்.எஸ்.எஸ். வார இதழானவிஜயபாரதம்'36 பக்கங்களிலும் விவேகானந் தரைப்பற்றி விளக்கி யுள்ளதே - நாம் எழுப்பி இருக்கும் இந்தக் கேள்விக்கு அடுத்த இதழில் பதில் சொல்லுமா?