எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வல்லம், செப். 12- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யத்தின் பெரியார் புரா திட்டத்தின் கீழ் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் நாட்டு நலப்பணித் திட்டம், பெரியார் மருத்துவக் குழுமம், பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி ஹர்சமித்ரா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் குன்னூர் திராவிடக்கழகமும் இணைந்து குன்னூர் காந்திபுரம் தாழ்த் தப்பட்ட ஏழை எளிய மக்கள் பயன் பெரும் வகையில் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 9.9.2018 ஞாயிறு காலை 9 மணி முதல் மதியம் 2.மணி வரை தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவம் மற்றும் புற்றுநோய் கண்டறியும் மருத் துவ முகாம் நடைபெற்றது.

பெரியார் மணியம்மை மருத்து வமனை மருத்துவ குழுவுடன் மருத்துவ முகாமிற்கு 40 க்கும் மேற்பட்ட மருத்து வர்கள், செவிலியர்கள், மாணவிகள், பணியாளர்கள் ஆகியோர் மருத்துவ சேவை வழங்கினார்கள். இந்த ஆண்டு நடைபெறும் ஒன்பதாவது பெரிய மருத்துவ முகாம் ஆகும். சிறப்பு அம்சமாக, கண் பரிசோதனை, இரத்த பரிசோதனை நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமில் பெண்கள் குழந்தைகள், பெரியவர்கள் இளை ஞர்கள் என பலர் கலந்துகொண்டு பய னடைந்தனர். இதில் கண் பரிசோதனை யில் 68 பேர், இரத்தப் பரிசோதனையில் 51 பேர், பொது மருத்துவத்தில் 206 பேர் கலந்து கொண்டனர், மேலும் மார்பகப் புற்றுநோய் கண்டறியும் மருத்தவ சோதனையில் 52 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த மருத்துவக்குழுவில் பெரியார் மருத்துவக் குழுமத்தின் இயக்குநர் மருத்துவர் ஆர்.கவுதமன், மருத்துவர் எஸ்.பிறைநுதல் செல்வி  (பொருளாளர் திராவிடர் கழகம்), மருத்துவர் பி.மஞ்சுளவாணி (பெரியார் மருத்துவமனை திருச்சி), மருத்துவர் எஸ்.நித்யா- (குன் னூர்), மருத்துவர் ஜி.கே.கலைசெல் வன் (ஈரோடு), மருத்துவர் பி.ரமேஷ் (குன்னூர்), மருத்துவர் சி.தியாகராஜன் (-பெரியார் மணியம்மை மருத்துவமனை திருவெறும்பூர்), மருத்துவர் ஜெ.இரவிச் சந்திரன் (-குன்னூர்), மருத்துவர் ரூகி பானுசடாய் (ஹர்சமித்ரா மருத்துவ மனை திருச்சி), மருத்துவர் பாவனா (குன்னூர்), மருத்துவர் இனியன் (-குன் னூர்), மருத்துவர் ஆர்.புகழேந்தி (குன் னூர்), என்.கோகுல்-சை சாதனா லேப் (குன்னூர்), பி.தியாபாரதி (வாசன் மருத் துவமனை குன்னூர்), முனைவர் ஆர். செந்தாமரை (முதல்வர் பெரியார் மருந்தியல் கல்லூரி திருச்சி, பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்ய இயக்குநர் பேராசிரியர் த.ஜானகி, பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் உதவிபேராசிரியர் ஆர்.சந்திரசேகரன் மற்றும் பெரியார் புரா திட்ட ஒருங்கிணைப்பாளர் க.முரு கேசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப் பான மருத்துவ சேவை வழங்கினார்கள்.

இந்த மருத்துவ முகாமை எம்.இராம சாமி (நகர செயலாளர் திராவிட முன் னேற்ற கழகம், குன்னூர்) துவக்கிவைத்து தந்தை பெரியார் அவர்கள் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இனத்தவர்களுக்காக அவர்களின் வாழ்க்கை முன்னேறவும் மிகவும் பாடு பட்டார் எனவும், இந்த மருத்துவ முகா மின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினார்.

மேலும் இந்த மருத்துவ முகாமில் ஆ.கருணாகரன்- (கோவை மண்டல தி.க.தலைவர்), மு.வேணுகோபால் (-நீலமலை மாவட்ட தலைவர்), மு.நாகேந்திரன் (நீலமலை மாவட்ட கழக செயலாளர்), யா.சத்தியநாதன் (நீல மலை மாவட்ட இளைஞர் அணி கழ கத் தலைவர்), தினகரன் -(இளைஞரணி), யா.பிரேம்குமார், இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் முருகன்- (மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர்), ஜீவா -(இளைஞரணி), அருணா (கோத்தகிரி ஒன்றிய மகளிரணி அமைப்பாளர்), ராம்குமார் (மாணவரணி தலைவர்), ரவிவண்ணன் -(மாவட்ட அமைப் பாளர்), வாசுதேவன் - (பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர்), வெங்க டேஷ் (கோத்தகிரி நகர அமைப்பாளர்), துரைராஜ் (-கிளை செயலாளர் தி.மு.க செ.), முருகேசன் (நகர செயலாளர் தி.மு.க) மற்றும் வனிதா (தலைமை ஆசிரியை) ஆகியோர் கலந்துகொண்டு இந்த மருத்துவ முகாமை சிறப்பு செய் தனர். மேலும் இந்த மருத்துவ முகா மினை பெரியார் மருத்துவக் குழுமம் சென்னை, நீலமலை திராவிட கழகம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

இறுதியாக பெரியார் மருத்துவக் குழுமத்தின் இயக்குநர் மருத்துவர் ஆர். கவுதமன் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய அனை வருக்கும் நன்றியை தெரிவித்து கொண் டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner