எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, பிப்.11 உத்தரபிரதேசத்தில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகப் போவதாக, சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, மிரட்டல் விடுத்துள் ளது.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந் துள்ளது. விரைவில் மக்களவைக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும், கட்சியான, சுகல்தேவ் பாரதிய சமாஜ், அதிலிருந்து விலகப் போவதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து, அக்கட்சியின் பொதுச்செய லாளர், அருண் ராஜ்பார் கூறியதாவது:

சமூகநீதிக் குழு அளித்துள்ள பரிந் துரையை, வரும், 24 ஆம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், கூட்டணியில் இருந்து விலகுவோம். வரும் மக்களவைத் தேர்தலில், 80 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். தேவைப்பட்டால், பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணியில் இணைவோம். இது குறித்து, அவர்களுடன் ஏற்கெனவே பேசி வருகிறோம். பிற்படுத்தப் பட்டோர் வகுப்பில் உள்ளவர்களை, மூன்று பிரிவுகளாகப் பிரித்து, இடஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்பது உள்பட, சமூக நீதிக் குழு, பல பரிந்துரைகளை அளித்துள் ளது.

இந்தக் குழு, தன் அறிக்கையை அளித்து நீண்ட காலமாகிறது. மக்களவைத் தேர்தலுக்கு, ஆறு மாதங்களுக்கு முன், இந்தப் பரிந்துரைகள் நிறைவேற்றப்படும் என, பா.ஜ., தலைமையிலான அரசு கூறியது. ஆனால், இதுவரை நிறைவேற்ற ப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது, சட்டசபையில், இந்தக் கட்சிக்கு, நான்கு, உறுப்பினர்கள் உள்ள னர்.சமீபகாலமாகவே, முன்னாள் முதல் வர்கள் மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி கள் கூட்டணியில் இணைவது குறித்து, சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி பேசி வருகிறது. இந்நிலையில், பா.ஜ., கூட்ட ணியில் இருந்து வெளியேறுவதாக, மிரட் டல் விடுத்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner