மகாராட்டிர மாநிலத்தில் 48 தொகுதிகளிலும் பி.ஜே.பி. வெற்றி பெறும் என்று பி.ஜே.பி. தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். அதற்கு தேசியவாத காங்கிரசு செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் பதிலடி கொடுத்துள்ளார்.
48 தொகுதி என்ன? இல்லாத 50 தொகுதிகளிலும்கூட வெற்றி பெறுவோம் என்று பி.ஜே.பி. சொல்லக்கூடும். பாராமதி தொகுதியில் மோடியோ, அமித்ஷாவோ முதல்வர் பட்னாவீசோ நிற்கத் தயாரா என்று சவால் விட்டார் தேசிய வாத காங்கிரசு செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக்.
எச்சரிக்கை!
ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மறுபடியும் பயன் படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தினால் கெட்ட கொழுப்பு அதிகரித்து புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்!