எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, ஜன.18 சிறீரங்கம் கோவிலில் பிரம்மரத முறையை தடை செய்ய கோரி மறியலில் ஈடுபட்ட திராவிடர் கழகத்தினர் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிறீரங்கம் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசியின் போது, கோவிலில் வேதம் ஓதும் பாசுர பட்டர், அரையர் (பார்ப்பனர்கள்)  ஆகியோர் சிறீரங்கம் கோவிலிலிருந்து அவர்களின் வீடுவரை பல்லக்கில் தூக்கிச் செல்வது  பிரம்மரத முறையாகும். மனிதனை மனிதன் தூக்கிச் செல்லும் இந்த முறை கூடாது என தொடக்க காலம் முதலே திராவிடர் கழகம் கண்டித்து வருவதோடு, பல்வேறு கூட்டங்கள், மாநாடுகள் இதற்கென நடத்தியதன்  காரணமாக இம்முறைக்கு தடை விதிக்கப்பட்டது.

ஆனால், பார்ப்பனர்கள் உயர்நீதிமன்றத்தில் பிரம்மரத முறையை நடத்த உத்தரவு பெற்று தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவ்வாண்டு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று (18.1.2017) காலை பிரம்மரத முறை நடத்தப்பட்டது.

மனிதனை மனிதன் சுமப்பதை கண்டித்து திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தினர் சிறீரங்கம் பெரியார் மய்யத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ரெங்கா ரெங்கா கோவில் நுழைவு வாயில் வரை பேரணியாக சென்றனர். மாவட்ட  தலைவர் ச.கணேசன், மண்டலத் தலைவர் ஞா-.ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ், பொதுக்குழு உறுப்பினர்கள்  மு.சேகர், ரெஜினாபால்ராஜ், மாவட்ட அமைப்பாளர் மு.இளவரி, லால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கோ.பாலசுப்ரமணியன், மாவட்ட செயலாளர் ஆ.அங்கமுத்து, இளைஞரணி செயலாளர் பி.தேவா, சிறீரங்கம் நகர தலைவர் சா.கண்ணன்,  செயலாளர் இரா.முருகன், ஜே.ஸ்டாலின், மு.மணிவேலன், பால்ராஜ், காட்டூர் கனகராசு, சங்கிலிமுத்து, அல்லித்துறை ராஜசேகரன், கல்பாசிகம் அ.ராமச்சந்திரன், குருலம்பட்டி சக்திவேல், லால்குடி ஒன்றிய செயலாளர் பிச்சைமணி, அமைப்புசாரா தொழிற்சங்க தலைவர் திராவிடன் கார்த்திக், லால்குடி மாவட்ட துணைத் தலைவர் மு.அட்டலிங்கம், ஆதிதமிழர் பேரவை மாநில பொதுச்செயலாளர் செங்கை குயிலி ஆகியோரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதனால் சிறீரங்கத்தில் இன்று (18.1.2017) காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner