எழுத்துரு அளவு Larger Font Smaller Font

1. டிசம்பர் 4 ஆம் தேதி 2016

கச்சத்தீவில் கட்டப்பட்டுள்ள புதிய அந்தோணியார் கோவிலுக்கு இந்திய ஊடகங்கள் மற்றும் மீனவர்களை அனுமதிக்க மாட்டோம் என்றும், திருச்சபையைச் சேர்ந்தவர்கள் மட் டுமே கலந்துகொள்ள வேண்டும் என்றும் இலங்கை மீன்வளத்துறையும், கப்பற்படையும் உத்தரவிட்டிருந்தன. இதனை அடுத்து டிசம்பர்  4ஆம் தேதி இராமேஸ்வரத்தில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், கச்சத்தீவில் புதிய ஆலயத்திற்கான திறப்பு விழாவுக்கு தேதி குறிக்கப்பட்டுள்ளது. அவ்விழாவுக்கு தமிழக மீனவர்களுக்கு அனுமதிமறுக்கப்பட்டுள்ளது.கச்சத் தீவிற்குதமிழகமீனவர்கள்அனு மதிக்கப்படுவதற்கு நான் வெளி யுறவுத்துறை அமைச்சகத்திடம் பேசி வருகிறேன். உறுதியாக தமி ழக மீனவர்கள் அந்தோணியார் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்வார்கள். இதற்கான முயற்சி மேற்கொண்டு வருகிறேன்.

- மத்திய இணை அமைச்சர்

பொன். இராதாகிருஷ்ணன்

(டிசம்பர் 24 ஆம் தேதி நடந்த விழாவில் இலங்கை கடற்படை மற்றும் மீன் வளத்துறை அமைச்சகம் கூறியதைப் போன்று திருச்சபையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக் கப்பட்டனர்) பொன். ராதாகிருஷ்ணன் கப்பல்துறை இணை அமைச்சராக உள்ளார்.

2. ஜூலை 11,  2016

காவிரி மேலாண்மை வாரி யம் அமைக்க மத்திய அரசிடம் பேசியுள்ளேன், நதிநீர்ப் பிரச்சி னையைத் தீர்க்க அமைச்சர் உமா பாரதியைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளேன், ஆகஸ்ட் மாதத்திற் குள் மோடி தலைமையிலான அரசு காவிரிமேலாண்மை வாரியத்தை அமைத்து காவிரியில் நீர் கொண்டு வருவார்கள். நிரந்தர தீர்வு காண் பதற்காக சிறிது தாமதமானாலும் மோடி தலைமையிலான அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்.

3. அன்றும் இன்றும்

ஜல்லிகட்டுத் தடைக்கு பீட்டா போன்ற அமைப்புகளே காரணம் ஜனவரி 13, 2016

ஜல்லிகட்டுத்தடைக்கு பீட்டா அமைப்பு காரணமல்ல, திமுகதான் காரணம் ஜனவரி 12, 2017

4. ஏப்ரல் 2016

இலங்கைப் படை சிறைப்பிடித்த படகுகளை விடுவிக்க கோரி தங்கச்சி மடத்திலுள்ள மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் இலங்கை பிடித்துவைத்துள்ள படகுகளை சுஷ்மா சுவராஜிடம் பேசி திரும்பி கொண்டுவந்து உங் களிடம் ஒப்படைக்க கோரிக்கை விடுத்துள்ளேன். விரைவில் படகு கள்உங்களிடம்வந்துசேரும்என்று உறுதி மொழியளித்தார். இவரின் உறுதிமொழியைஅடுத்துமீனவர் கள் உண்ணாவிரதத்தை முடிவிற்கு கொண்டு வந்தனர்.

5 டிசம்பர்  2014

காவிரியில் கர்நாடகா அணை கட்டுவதை தடுக்க விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுவினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக அனைத்து கட்சி தலைவர்களை சந்திக்க  ஒருங்கிணைப்பு குழுவினர் சென்னை செல்கின்றனர்.இதுகுறித்து திருவாரூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:

காவிரியில்கர்நாடகஅரசுகட்ட உள்ளபுதியஅணைகளைதடுத்து நிறுத்தக்கோரி டெல்டா மாவட்டங்களில்  கடந்த நவம்பர் 22 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து டெல்லியிலும் 3 நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக விவசாயிகள் பிரச்சினை குறித்து மோடியின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கூறி, உண்ணாவிரத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டதால்  உண்ணாவிரதம் விலக்கி கொள்ளப் பட்டது. ஆனால், நடந்தது என்ன?

6. 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்

செங்கல்பட்டுசிறப்பு இலங்கை அகதிகள்முகாமிற்குச்சென்று-மத்தியிலுள்ளமன்மோகன்சிங்தலை மையிலான அரசு, இலங்கைத்தமிழர் களை மிருகங்களைப் போல் சிறப்பு முகாம் என்ற பெயரில் சிறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்கிறது. மோடி தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங் கப்படும், நானே முன்னிருந்து இலங்கைத் தமிழர்களுக்கான உரிமைகளை வாங்கித் தருவேன் என்று கூறினார்.  (மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கான் போன்ற நாடுகளில் இருந்து இடம்பெயர்ந்த இந்துக்களுக்கு ராஜஸ்தான், டில்லி, பஞ்சாப், போன்ற மாநிலங்களில் சிறப்பு குடியுரிமை அலுவலகம் அமைத்து, எல்லைதாண்டி இந்தியா விற்குள் நுழைந்த உடனேயே அவர்களுக்குத் தற்காலிக இருப்பிடம் உணவு வழங்கி தொழில் தொடங்க கடனுதவியும் வழங்கி வருகிறது. 6 மாதங்களுக்குள் குடியுரிமை வழங்கி வருகிறது. இதுவரை 37 ஆயிரத்திற்கு மேல் இந்தியக் குடியுரிமை வழங் கியுள்ளார்கள்.ஆனால்,30ஆண்டு களாக அகதிகள் முகாமில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இன்று வரை எந்த ஒரு உதவியும் மத்திய அரசு வழங்கவில்லை) தற்போது அவர்களுக்கான அகதிகள் உரி மையை ரத்து செய்து மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் பணி துரித மாக நடந்து வருகிறது.

இதர போலியான வாக்குறுதிகள்

குளச்சல் மீன்பிடி துறைமுக விரிவாக்க வாக்குறுதி (2014  நாடா ளுமன்ற தேர்தல்)

எய்ம்ஸ் மருத்துவமனையை மது ரைக்கு கொண்டுவந்தே தீருவேன். (2015 ஆகஸ்ட்)

குமரி பகுதியில் படகு போக்கு வரத்துக்காக அனைத்து வசதிகளும் கொண்ட சுமை கொண்டு செல்லும் படகுகளை விரைவில் அறிமுகப் படுத்துவேன். (2015 அக்டோபர்)

மோடி முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை குறித்து தனிப்பட்ட முறையில் அக்கறை கொண்டுள்ளார். முதல்வர் மிகவும் விரைவாக குணமடைந்து வருகிறார். எய்ம்ஸ் மருத்துவர்கள் சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். சிறப்பாக சிகிச்சை அளித்துவரும் எய்ம்ஸ் மருத்துவர்களை உளவாளிகள் என்று கூறுவது தவறானது.  (அக்டோபர், 3 2016)

இப்படி முன்னுக்குப்பின் முரணாகப் பேசி வருபவர்தான் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner