எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வரலாற்றுச் செய்தியை எடுத்துக்காட்டி ஆண்டாளை விமர்சித்ததற்காக வைரமுத்து

உருவப் படத்தைக் கொளுத்துவதும், செருப்பாலடிப்பதும் எங்கே கொண்டு போய்விடும்?

பார்ப்பனர் அல்லாதாரை சூத்திரர்கள் என்று கூறும் மனுவாதிகள் மன்னிப்புக் கேட்கட்டும்

இராமாயணம், கீதை, மனுதர்ம நூல்கள் கொளுத்த நாள் குறிப்போம்

ஆரியர் - திராவிடர் போராட்டத்துக்குத் தன்மானம் உள்ளோரே ஆயத்தமாவீர்!

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி இனமான அறிக்கை

ஏழுமலையான் கோவில் உண்டியலுக்குக் காவல் ஏன்?  கவிஞர் கனிமொழி கேட்ட கேள்விக்குப் பதில் எங்கே?

வரலாற்றுக் குறிப்பொன்றை எடுத்துக் கூறி ஆண்டாள் பற்றிப் பேசியதற்காக கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்மீது சீறிப் பாய்வோர், அவர் படத்தைக் கொளுத்துவோர் பார்ப்பனர் அல்லாதாரை சூத்திரர்கள் என்று எழுதி வைத்துள்ளார்களே, அதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிடின், இராமாயணம், பாரதம், கீதையைக் கொளுத்தும் நிலை ஏற்படும் என்று எச்சரித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

'தினமணி' நாளேட்டின் ஆசிரியர் திரு. வைத்தியநாதன் அவர்களது ஏற்பாட்டில், ராஜபாளையத்தில் 'தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து அவர்கள் ஒரு போற்றியுரையை கட்டுரையாடல் என்ற தலைப்பில் பல தமிழ் இலக்கியப் பாத்திரப் படைப்புகள் பற்றி எழுதி, வாசிக்கிறார். இந்த வரிசையில்தான் ஆண்டாள் பற்றிய கட்டுரை ஒன்றையும் 7.1.2018 அன்று படைத்தார்.

ஆண்டாளைப் போற்றுவதுதான் அவ்வுரை; அதில் ஆய்வாளர் ஒருவர் எழுதிய நூலிலிருந்து ஒரு மேற்கோள் காட்டினார். அதில் அவரை 'தேவதாசி' என்று குறிப்பிட்டது தங்களுக்கு மனப்புண்ணை ஏற்படுத்துகிறது என்று பார்ப்பனர் சிலரும், ஜீயர்களில் ஒருவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தனக்குத்தானே விளம்பரம் தேடும்

தரக் குறைவான ஆசாமி!

தனக்கு விளம்பரம் தேடிட முந்தும் காரைக்குடி மதவெறிப் பார்ப்பனர் ஒருவர், தனது உண்மையான தரம் இதுதான் - கீழ்த்தரம்தான் என்று காட்டும் வண்ணம், கவிஞர் வைரமுத்து கருத்துக்கு எதிரான வாதங்களை எடுத்து வைக்க வழியின்றி அவரது குடும்பம் பற்றியெல்லாம் மனுதர்ம நடையில் பேசி, இணையத்தில் வாங்கிக்கட்டிக் கொண்டு வருகிறார்!

இதற்குச் சிறிதும் சம்பந்தமில்லாத தமிழினத் தலைவர் கலைஞர் போன்றவர்களின் உடல் நலக் குறைவைக் கூடச் சுட்டிக் காட்டிடும் மனிதாபிமானமற்ற - விலங்காண்டித்தன விமர்சனத்தைச் செய்ததோடு இந்த நரகல் நடையாளர் திராவிடர் இனத் தலைவர்கள்மீதும் குரைத்துள்ளதற்கு (மத) வெறி நாய்களுக்கும், சொறி நாய்களுக்கும் பதில் சொல்லும் வகையில் முகநூல் மற்றும் டிவிட்டரில் நமது இனவுணர்வாளர்கள் கொதித்து எழுந்துள்ளார்கள்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் பா. இரஞ்சித், தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் அமைப்பினர், திராவிடர் இயக்கச் சிந்தனையாளர்கள் அதற்குக் கண்ணியம் குறையாத எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்!

ஆனால் 'ஆண்டாளை'க் கருவியாகக் கொண்டு ஹிந்துத்துவாவாதிகளான ஆர்.எஸ்.எஸ். மற்றும் பார்ப்பன அமைப்புகளும், 'தினமலர்' போன்ற 'இனமலர்' ஏடுகளும் இதனை மேலும் விசிறி விட்டு, ஜீயர் ஒருவரையும் துணைக்கழைத்துள்ளார்கள்.

அக்கிரகார மடிசார்மாமிகளும்

வீதிக்கு வந்து விட்டனர்

திருவல்லிக்கேணியிலும் அக்கிரகார அம்மாமிகளும், சிறீவில்லிப்புத்தூர் மாமிகளும் சிறீரங்க மடிசார் பார்ப்பன ஸ்திரீகளும் (வர்ணாசிரமத்தின்படியில் மனுதர்மப்படி பார்ப்பனப் பெண்களும் கீழிலும் கீழானவர்கள் என்பதை மறந்து விட்டு), பார்ப்பன சங்கத்தவரும், தலைகொழுத்து  ஆடி, 'வைரமுத்து வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதாது; ஆண்டாள் கோவிலுக்கே வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும்' என்று நிபந்தனை விதித்து, மதக் கலவரம், ஜாதிக் கலவரத்திற்கு வித்திட்டுள்ளனர்.

அமைதிப் பூங்காவாகத் திகழும் பெரியார் மண்ணான - சமூகநீதிக்களமான - பகுத்தறிவுப் பூமியான - இத்தமிழ் நாட்டை கலவர பூமியாக்கிட - விளைவறியாத வினையில் வீணில் ஈடுபட்டு, கொள்ளிக்கட்டையை எடுத்து தங்கள் தலையை தாங்களே சொறிந்து கொள்ளும் 'அதி புத்திசாலித்தனத்தில்' ஈடுபட்டு வருகிறார்கள்.

மீண்டும் ஓர் ஆரியர் - திராவிடர் போராட்டம்!

மீண்டும் ஒரு ஆரிய - திராவிடப் போருக்குத் தேவையின்றி அறைகூவல் விடுகின்றனர். காந்தியாரை கோட்சே என்ற மராத்திப் பார்ப்பான் சுட்டுக் கொன்ற செய்தி பரவியவுடன், மராத்திய மண்ணில் பார்ப்பனர்களின் வீடுகள் சூறையாடப்பட்டு, பார்ப்பனர்கள் தாக்கப்பட்ட நிலையில்கூட, தந்தை பெரியார் தமிழ்நாட்டில் இதை மதக் கலவரமாக, ஜாதிக் கலவரமாக மாற்றும் முயற்சியைத் தடுத்து நிறுத்தி, பார்ப்பனர்களுக்குப் பாதுகாப்பு ஏற்படுத்தித் தந்தார்! அது பழைய வரலாறு!

ஆனால் 2018இல் தங்களுடைய கை ஏதோ ஓங்கி விட்டதுபோல நினைத்து, பார்ப் பனரல்லாதோரைச் சீண்டிப் பார்த்து நெருப்போடு விளையாடத் தொடங்கியுள்ளனர்!

பந்து வைரமுத்து என்ற தனி நபரிடம் இல்லாமல், பார்ப்பனரல்லாத இனவுணர்வாளர் - மொழி உணர்வாளர்கள் தோட்டத்திற்கு பார்ப்பனர்களாலேயே தள்ளிவிடப்பட்டுள்ளது.

தமிழர்கள் - இன உணர்வாளர்கள் கட்சி, ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இந்தச் சவாலை ஏற்கத் தயாராகி விட்டார்கள்.

ராஜாஜிமீது கோபம் வராதது ஏன்?

ஆண்டாள் என்ற பாத்திரம் கற்பனை என்று கூறிய வைணவ ராஜாஜிமீது "அவாளுக்கு"க் கோபம் வரவில்லை; ஆண்டாளைப்பற்றி 40ஆண்டுகளுக்கு முன் ஆய்வுரை எழுதியவர்மீது ஆத்திரம் வந்து மறுப்புத் தெரிவிக்கவில்லை!

இப்போது இவர்மீது ஆத்திரம் பொத்துக் கொண்டு பீறிட்டு அடிக்கிறதாம்; தேவதாசி என்று கூறியதற்காக பகிரங்க மன்னிப்பு கவிப் பேரரசு வைரமுத்து கேட்க வேண்டும் என்பவர்களைப் பார்த்துக் கேட்கிறோம்.

சூத்திரர்கள் என்று சொன்னவர்கள்

பகிரங்க மன்னிப்பு கேட்கட்டும்

கோடானு கோடி உழைக்கும் மக்களை "சூத்திரர்கள், பஞ்சமர்கள், சண்டாளர்கள், நீச்சர்கள்" என்று எழுதியதோடு, மனுதர்மம் எட்டாம் அத்தியாயம் 415ஆம் சுலோகத்தில் சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் என்று எம்மை எழுதி வைத்துள்ளதோடு, அதை ஹிந்துச் சட்டமாக்கியதோடு, இந்திய அரசியல் சட்டத்திற்குப் பதில் மனுதர்மமே இடம் பெற வேண்டும் என்று தீர்மானிக்கும் இந்தக் கூட்டம் அதற்குப் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டாமா?

"சூத்திரர்களும், பெண்களும் பாவயோனியில் பிறந்தவர்கள்" என்று எழுதிய கீதையைப் பரப்பும் ஜாதிக் கிறுக்கர்கள் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டாமா?

'சூத்திர சம்பூகன்' தவம் செய்தமைக்காக பார்ப்பனர் வேண்டுகோளை ஏற்று தலையை வெட்டிய இராமனின் இராம இராஜ்ஜியத்திற்காக - அதே இராமனை தூக்கிப் பிடிப்போர் சூத்திரர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டாமா?

ஏகலைவன் (கீழ்ஜாதி வேட்டுவன்) தன் கலையை  - தனுசு வித்தையை (அம்பு எய்துதல்) கற்றமைக்காக கட்டை விரலை வெட்டிக் கேட்ட மகா பாரத துரோணாச்சாரியாரின் செய்கைக்காக  மன்னிப்புக் கேட்க முன்வர வேண்டாமா?

மனுஸ்மிருதி இராமாயணம்

கீதைகளைக் கொளுத்துவோம்!

இப்படிச் செய்ய முன், வரா விட்டால் மனுஸ்மிருதி, இராமாயணத்தின் சம்பூகவத, பகவத் கீதையில் ஜாதி,  சூத்திர பெண்கள் இழிவுப் பகுதிகளை பகிரங்கமாக நாடு தழுவிய அளவில் தீயிட்டுப் பொசுக்கிட நாள் குறிப்போம்!

அறிஞர் அண்ணா சொன்னதுபோல ஆரிய மூல பலத்தினை முறியடிப்பதுதான் பெரியாரின் போர் முறை!

திராவிடர் இழிவுகளுக்கு விடை காண்போம்!

எங்கள் மனங்கள் எத்தனை ஆயிரம் ஆண்டுகளாகப் புண்பட்டது; அதுபற்றி பரிகாரம் தேடுவோம்!

வெடிக்கட்டும் சூத்திரப் புரட்சி!

நொறுங்கட்டும் ஜாதி ஆணவம்!!

இளைஞர்களே, ஜல்லிக்கட்டுப் போராட்ட உணர்வுக்கு புதிய வடிவம் தர பார்ப்பனர்கள் நம்மை உசுப்பி விடுகிறார்கள்.

அவர்களது வம்புகளை எதிர் கொள்ள ஆயத்தமாவீர்!

 

கி. வீரமணி
தலைவர்,     திராவிடர் கழகம்

 

சென்னை
12-1-2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner