எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மூடத்தனத்துக்கு முடிவேயில்லையா?

மக்கள் உயிரோடு விளையாடும் பா.ஜ.க. அரசு!

மாட்டு மூத்திரத்தை ஊட்டச்சத்து பானமாக அறிவிக்க உத்தரப்பிரதேச அரசு முடிவாம்!

லக்னோ, பிப்.7 பசுமாட்டு கோமி யத்தை ஊட்டச்சத்து பானமாக அறிவிக்க உத்தரப்பிரதேச முதல்வர் சாமியார் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு திட்டமிட்டுள்ளது

பாஜக ஆளும் மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் சாமியார் ஆதித்யநாத் ஆட்சி நடத்தி வருகிறார். தற்போது அங்கு பசுமாட்டு கோமியத்தை ஊட்டச்சத்து பானமாக அறி விக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கெனவே, உத்தரப்பிர தேச மாநிலத்தில் கோமியத்தில் இருந்து எட்டு ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறதாம். இந்நிலையில், அரசின் இந்த முடிவுக்கு இந்து அமைப்புகள் பலத்த வரவேற்பு அளித்துள்ளன.

பிலிபிட் என்னும் இடத் தில் செயல்பட்டு வரும் ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிலையம் தான் பசுமாட்டுக் கோமியத்தை ஊட்டச்சத்து பானமாக தயாரிக்க முன் வந்துள்ளது. அங்கு பசுக்களின் கோமியம் சுத்தப்படுத்தப்பட்டு பாட்டிலில் அடைத்து விற்ப னைக்குத் தயாராக அனுப்பி வைக்கப்படுமாம்.

இதுகுறித்து அரசு அதி காரிகள் கூறுகையில், பசு மாட்டு கோமியம் என்பது பல்வேறு ஆயுர்வேத குண நலன்கள் நிறைந்தது. எனவே, இந்தத் திட்டத்திற்கு மாநிலம் முழுவதும்வரவேற்புஎழுந் துள்ளது.தினமும்10முதல் 20 மில்லி லிட்டர் பசு மாட்டு கோமியம் குடித் தால் பல விதமான நோய் களைத்தடுக்கலாம்.மேலும் அனைவரும் விரும்புவதற் கேற்ப செயற்கை சுவைகளு டன் சாக்லேட், ஆரஞ்சு, திராட்சை போன்ற வகைகளை கொண்டுவர உள்ளோம்  விரைவில்பாட்டிலில்விற் பனைக்குத் தயார் செய்யப் பட்டுவருகிறதுஎன்றுதெரி வித்துள்ளனர். அரசு அறிவிப் பாணை வெளியிட்டுவிட்டால் நாடு முழுவதும் விற்பனைக்குக் கொண்டுசெல்வோம் என்றும் கூறினர்.

ராஜஸ்தானில் கழிவறை மற்றும் மருத்துவமனைகளைக் கழுவுவதற்கு பினாயிலுக்கு பதிலாக மாட்டுக் கோமியத்தை தெளிக்ககூறிஅரசாணைவெளி யிடப்பட்டது,மருத்துவர்களின் கடுமையானஎதிர்ப்பையடுத்து அத்திட்டம் கைவிடப்பட்டது, இந்த நிலையில் தற்போது ஊட்டச்சத்துபானமாகசாமி யார்அரசு மாட்டு மூத்தி ரத்தை சந்தையில் கொண்டு வர உள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.

 



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner