எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு மார்ச் 18  அய்ன்ஸ்ட்டீனுடைய  சார்பியல் தத்துவத்தை விட உயர்ந்த தத்துவம் நமது வேதங்களில் உள்ளதாக மறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார் என்று மத்திய அறிவியல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சகத்தின் சார்பில் 'இந்திய அறிவியல் கழகத்தின்' 105-ஆவது மாநாட்டின் துவக்க விழா இம்பாலில் நடைபெற்றது. இதனை அத்துறைக்கான மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் துவக்கி வைத்து உரையாற்றினார். அப்பொழுது அய்ன்ஸ்ட்டீனுடைய சார்பியல் தத்து வத்தை விட உயர்ந்த தத்துவம் நமது வேதங்களில் உள்ளதாக மறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார் என்று அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரி வித்துள்ளார்.

அவர் தனது உரையில் கூறியதாவது:

நாம் சமீபத்தில் மிகப்பெரிய வானி யல் துறை விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங்கினை இழந்துள்ளோம். அவர் ஒருமுறை தனது உரை ஒன்றில், உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் அய்ன் ஸ்ட்டீனுடைய சார்பியல் தத்துவத்தை விட, உயர்ந்த தத்துவம், இந்தியாவின் வேதங்களில் உள்ளதாக வலுவாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் தனது பேச்சில் தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது, ‘‘ஸ்டீபன் ஹாக்கிங் அவ்வாறு கூறியதற் கான ஆதாரம் உள்ளதா?'' என்று செய்தி யாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியதாவது:

‘‘அதை நீங்கள்தான் கண்டறிய வேண்டும். அவர் சொன்னதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைப்பற்றி நீங் கள் கொஞ்சம் உழைத்துக் கண்டறிய வேண்டும். அவ்வாறு கண்டுபிடிக்க இயலா விட்டால், டில்லியில் வந்து என்னிடம் தெரிவியுங்கள். நான் இதை ஒரு பொதுவான அரங்கில்தான் தெரி வித்துள்ளேன். ஸ்டீபன் ஹாக்கிங்கினை இந்த இடத்தில் நினைவுகூர  வேண்டும் என்று விரும்பினேன்.''

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

www.servveda.org என்ற இணைய தளத்தில் ஸ்டீபன் ஹாக் கிங் அவ்வாறு கூறியுள்ளதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது. அந்த தளத்தினை "வேதங்களில் அறிவியல் ஆராய்ச்சி" என்னும் அமைப்பு நடத்தி வருகிறது. இந்த அமைப்பினை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஆராய்ச்சி அமைச்சகம் அங்கீகரித்துள்ளதாக அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

இவர்களே இணையத்தில் சில செய் திகளை உலவவிட்டு, அதுதான் அறிவி யல் உண்மை என்று பேசுவது, விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் அதிர்ச் சியையும், கொதிப்பையும் ஏற்படுத்தி யுள்ளது.

இதேபோல முன்பு மும்பையில் நடைபெற்ற ‘இந்திய அறிவியல் கழ கத்தின்' 102-ஆவது கூட்டத்தில், 7000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் ஆகாய விமானங்களின் பயன்பாடு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட விவ காரம் சர்ச்சையினை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மாட்டிறைச்சி விவ காரம் குறித்து டில்லியில் செய்தியா ளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் மேலும் தெரிவித்ததாவது:

‘‘அசைவத்தைக் காட்டிலும் சைவ உணவு பழக்கம் சிறந்தது. வெளிநாடு களிலும் பலர் தற்போது சைவத்துக்கு மாறி வருகின்றனர். பல்வேறு புற்று நோய்கள் வருவதற்கும் அசைவ உணவுப் பழக்கத்திற்குத் தொடர்பு உள்ளது'' என்று கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி

இந்துத்துவ அரசியல் சித்தாந்தம் கொண்ட இவர்கள் இதுபோன்று கூறுவது முதல்முறை அல்ல. ஏற்கெ னவே இவர்களின் தலைவராக உள்ள மோடி விநாயகருக்கு யானைத் தலை யைப் பொருத்தியதுதான் உலகின் முதல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை (பிளாஸ்டிக் சர்ஜரி) என்றும், குந்திதேவிதான் உலகின் முதல் சோத னைக் குழாய்மூலம் (டெஸ்ட் டியூப்) குழந்தை பெற்றவர் என்றும் 2015- ஆம் ஆண்டு மும்பையில் உள்ள திருபாய் அம்பானியின் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவப் பிரிவை திறந்து வைக்கும்போது கூறியிருந்தார்.

இதே ஹர்ஷவர்தன் 2015- ஆம் ஆண்டு டில்லியில் கல்வியாளர்கள் மாநாடு ஒன்றில் பேசும்போது நமது, காமசூத்திரம் என்னும் நூலிலேயே பாலியல் கல்வி உள்ளது எனக்கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார். காமசூத்திரம் இந்தியாவில் அறிவுப்புரட்சிபரவிஇருக்கும்இக்கால கட்டத்தில் மக்களை முட்டாள்களாக்கி அவர்களை பாலியல் ரீதியில் அடிமை களாக்கும் நூல் என்று பல கல்வியாளர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner