எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஜெய்ப்பூர், ஜூன் 9 நீட் தேர்வில் முதலிடம் பிடித்த கல்பனா குமாரி பிளஸ் டூ வகுப்பிற்குச் செல்லாமல் தேர்வு எழுதியதை நேற்று வெளியிட்டிருந்தோம். அதே மாணவி 10 வகுப்பிலும் மோசடி செய்த தகவல் இப்போது வெளிவந்துள்ளது.

கல்பனா குமாரி 2015 ஆம் ஆண்டுவரை பிகாரில் உள்ள நவோதயா வித்யாலயாவில் பயின்று வந்தார். ஆனால், 10 ஆம்வகுப்புத் தேர்வு மட்டும் பிகார் பள்ளிக் கல்வித் துறை தேர்வில் எழுதி மாநிலத்தில் முதல் வகுப்பு பெற்றுள்ளார்.

இதேபோன்று வட மாநிலங்களில் மோசடி நடப்பதை 2017 ஆம் ஆண்டே ராஜஸ்தான் கல்வித் துறை தலைவர் பிவானி சிங் ரஜாவர் கூறியுள்ளார்.

கல்பனா குமாரி மட்டுமல்ல; பிகாரில் பெரும்பாலான வசதியான வர்களின் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமலேயே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதோ ராஜஸ்தான் மாநில கல் வித்துறை தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பிவானி சிங் ரஜாவர் கடந்த 2017 ஆம் ஆண்டே (‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா‘, 13.5.2017) ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

அதன் விவரம் வருமாறு:

பிகார் பள்ளியில் காப்பியடிப்பது மட்டுமல்ல; பள்ளிக்கே வராமல் டில்லி, ராஜஸ்தான், சண்டிகர் போன்றஇடங்களில்தங்கி,இரண்டு மூன்று ஆண்டுகளாக நீட் தேர் விற்கு தயாராகிக்கொண்டு பள்ளி இறுதித்தேர்வு எழுதும் போது மட் டும் பள்ளிக்கு வந்து தேர்வெழுதி செல்வார்கள். அப்படி எழுத வந்த ஒருவர்தான் கல்பனா குமாரி. பள் ளிக்கூடத்திற்கே வராமல் முதல் மதிப்பெண் எடுப்பதும், அதை கொண்டாடுவதும் வெட்கக் கேடானது, பள்ளிக்கு ஒழுங்காக வந்து கடுமையாக உழைத்து தேர்வெழுதி வெற்றிபெற்ற சிபுல்தலா பள்ளி மாணவர் அபினவ் ஆதர்ஷ் தான் மாநிலத்தில் அறிவியல் பாடப்பிரிவில் முதல் மாணவராக வரத் தகுதியானவர் என்றார் அவர்.

பிகார் பள்ளித் தேர்வு ஆணையம் பள்ளிக்கே வராத ஒருவரை மாநிலத்தின் முதல் மாணவி என்று அறிவித்திருப்பது பிகாரில் படித்த மாணவ, மாணவி களுக்குஇழைக்கப்பட்ட அநீதி! என சிபுல் தலா அவாசிய வித்யாலயா தலைமையாசிரியர் டாக்டர் ராஜீவ் ரஞ்சன் கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநில கல்வி விரிவாக்க ஆணையக் குழுத் தலைவரும், கோடா சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பிவானி சிங் ரஜாவர் மேலும் கூறுகையில்,

2017- ஆம் ஆண்டு பயிற்சியகங்களில் படிக்கும் பிகார் மாணவர்கள் கோடாவில் உள்ள தால்வண்டி, போர்கண்டி, மான்புரா, நயாநொகரா போன்ற பகுதிகளில் வந்து, வீடு மற்றும் பயிற்சியகங்கள் நடத்துவோர் வாடகைக்கு எடுத்திருக்கும் விடுதி களில் (ஆஸ்டல்) தங்கி படிக்கின்றனர்.

இவர்கள் பெரும் பணக்காரர்களாக இருப்பதால் பல்வேறு தவறான பழக்க வழக்கங்களில் ஈடுபடுகின்றனர். இவர் களால் ஒழுங்காக பள்ளிக்குச் சென்று படிக்கும் எங்களது (ராஜஸ்தான்) பள்ளி மாணவர்கள் கெட்டுப் போகிறார்கள். என்று பிகார் மாநில பள்ளி மாணவர்கள் மீது குற்றச்சாட்டைக் கூறியிருந்தார்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner