எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே!

மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம்!

எங்களது பேரனும், வீ.அன்புராஜ் - சுதா ஆகியோரின் மகனுமான  அ.கபிலனுக்கும், நினைவில் வாழும் திரு.டி.மணிவண்ணன் - திருமதி. ராஜாமணி ஆகி

யோரின் பேத்தியும், (சென்னை) திருவாளர்கள் ம.கோபாலகிருஷ்ணன் - சுகுணா ஆகியோரின் மகளுமான

கோ. மகாலட்சுமிக்கும் இன்று (17.6.2018, ஞாயிறு) காலை சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் வாழ்க்கை இணை ஏற்பு விழா இனிதே, எளிமையாக நடைபெற்றது.

அதனை நான் நடத்தி வைத்தேன். எங்கள் குடும்பத்தில் நடைபெறும் வாழ்க்கை இணை ஏற்பு விழாக்களுக்கு நாங்கள் அழைப்பிதழ் அச்சிட்டு, முன்னரே விளம்பரங்கள் செய்து, பெருங்கூட்டத்தைச் சேர்த்த விழாவாக அமைப்ப தில்லை - இதற்குமுன்பும் கூட!

இம்மணமுறைக்கு ஒப்புதல் அளித்த மணமகளின் பெற்றோர் திரு.கோபாலகிருஷ்ணன் - சுகுணா மற்றும் அவர்களது சகோதரர்கள் குடும்பத்தவருக்கும் நமது நன்றி கலந்த பாராட்டுகள்!

கழகக் குடும்பத்தவர்களிடமும், சந்தித்தவர்களிடமும் தகவல் கூறியும், உடன் நம் அமைப்பில் அன்றாடம் உழைப்பவர்கள், சந்திப்பவர்கள் போன்ற கொள்கைக் குடும்பத்தவர் - குருதிக் குடும்பத்தவர்கள் சூழ நடத்திடுவதன்மூலம், நாம் பிரச்சாரம் செய்யும் எளிமையை, சிக்கனத்தைச் செயலில் காட்டுதல் முக்கியம் என்பதால், தங்கள் அனைவரின் வாழ்த்துகளையும் இம்மணமக்கள் பெறுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு என்ற உறுதியான எண்ணத்தில், தனித்தனியே அழைக்காமைக்கு அருள்கூர்ந்து யாரும் வருத்தப்படவேண்டாம் என்று கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்!

எதைச் சொல்கிறோமோ அதை நடைமுறையில் செய்து காட்டும் நோக்கம்தான் இதற்கு அடிப்படை;

கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் - சுதா - அதைவிட மணமக்கள் இதை ஆமோதித்தது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்தது!

இக்கொள்கைக்குப் புதிய அறிமுகமான மணமகளின் குடும்பத்தவரும் இதனை மனமுவந்து ஏற்றது எங்களுக்குப் பெரு வியப்பு - மகிழ்ச்சியும் கூட!

அவர்களுக்கு எங்கள் இதயங்கனிந்த நன்றியுடன் கூடிய பாராட்டு!

நம் அறிவு ஆசானின் வழிகாட்டுதலை வாழ்வியலாகக் கொண்டதால் இவ்வேற்பாடு!

நாமே பிறருக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும் அல்லவா?

புரிந்துகொண்டு அனைவரும் வாழ்த்துங்கள்!

நன்றி! நன்றி!! நன்றி!!

‘‘சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு!''

வாழ்க பெரியார்! வாழ்க மணமக்கள்!!

தங்கள் அன்புள்ள

சென்னை    வீ.மோகனா & கி.வீரமணி

17.6.2018        குடும்பத்தினர்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner