எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குஜராத் கலவரத்தில் 97 பேர் பலியான வழக்கு: 3 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல்

திகாம்பர், ஜூன் 26 நரேந்திர மோடி குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது குஜராத்தின் நரோடா பாட்டியாவில் 97 பேர் கொல்லப்பட்ட வழக்கில், 3 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

கடந்த 2002 ஆ-ம் ஆண்டு பிப்ரவரி 27- ஆம் தேதி அயோத்தியில் இருந்து குஜராத் திரும்பிக் கொண்டிருந்த சபர்மதி விரைவு ரயிலுக்கு யாரோ சிலர் தீ வைத்தனர். இதில் குழந்தைகள் உட்பட 57 பேர் தீயில் கருகி பலியாயினர். இதையடுத்து குஜராத் முழுவதும் கலவரம் வெடித்தது. அகமதாபாத்தின் புறநகர் பகுதியான நரோடா பாட்டியா பகுதியில் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் 97 பேர் பலியாயினர். அவர்களில் பெரும் பாலானோர் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த வர்கள்.

இந்த வழக்கில் 61 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் 32 பேர் குற்றவாளிகள் என்று கடந்த 2012- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது. மேலும் 29 பேரை விடுவித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு மனுக்களை உயர்நீதி மன்ற நீதிபதிகள் ஹர்ஷா தேவானி மற்றும் ஏ.எஸ்.சுபியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதில் பஜ்ரங்தள் முன்னாள் தலைவர் பாபு பஜ்ரங்கி உட்பட 16 பேர் குற்றவாளிகள் என்று கடந்த ஏப்ரல் 20- ஆம் தேதி நீதிபதிகள் அறிவித்தனர். அவர்களில் 13 பேருக்கு ஏற்கெனவே தண்டனை அறிவிக்கப்பட்டுவிட்டது. 3 பேரின் தண்டனை விவரம் தள்ளிவைக்கப்பட்டது. பாஜக முன்னாள் அமைச்சர் மாயாபென் கொட்னானி உட்பட மற்றவர்கள் விடுவிக் கப்பட்டனர்.

இந்நிலையில், பி.ஜே.ராஜ்புத், ராஜ் குமார் சவுமால், உமேஷ் பர்வாத் ஆகிய 3 பேருக்கும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் நேற்று 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுவதாக அறிவித்தனர். தண் டனை விதிக்கப்பட்ட 3 பேரும் 6 வார காலத்துக்குள் காவல்துறையினரிடம் சர ணடைய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மாயாபென் கொட்னானிக்கு தண்டனை எப்போது?

இப்படுகொலையில் ஈடுபட்டதில் அப்போதைய நரோடாபாட்டியா சட்டமன்ற உறுப்பினரான மாயாபென் கொட்னானியும் முக்கியமானவர் ஆவார். இந்து மதவெறி பயங்கரவாதிகளுக்குத் தேவையான ஆயுதங் களையும், மண்ணெண்ணெயையும் வழங்க ஏற்பாடு செய்தார். பெண்களையும், குழந் தைகளையும் தீயில் போட்டுத் துடி துடிக்கக் கொன்ற வெறியாட்டத்துக்குத் தலைமை தாங்கிய மாயாபென் கொட்னானி ஒரு மகப்பேறு மருத்துவர் ஆவார். இவரை மோடி குஜராத் முதல்வராக இருந்த போது, தனது அமைச்சரவையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத் துறையின் துணை அமைச்சராக்கி அழகு பார்த்தார். நீதி மன்றத்தில் தகுந்த சான்றுகளுடன் இவரது குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்ட நிலையில்  குஜராத் உயர் நீதிமன்றத்தின் அமர்வு, 20.04.2018 அன்று முன்னாள் பா.ஜ.க. அமைச்சர் மாயாபென் கொட்னானியை விடுதலை செய்திருக்கிறது. இவரது விடு தலைக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொலையுண்டோர் 3000-த்திற்கும் மேல்!

குஜராத்தில் நடந்த வன்முறைகுறித்து அமெரிக்க காங்கிரசு சபையின் நேரடி மேற்பார்வை மற்றும் மருத்துவமனைகள் ஆய்வுகளின்படி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

குஜராத் கலவரத்தில் கொலையுண்டோ ரின் எண்ணிக்கை 3000 க்கும் அதிகமெனவும் இவற்றில் அதிகமானோர் முசுலிம்கள் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 2,458 பேர் காயமடைந்தும் 223 பேர் காணாமலும் போனதோடு 919 பெண்கள் விதவைகளாகவும் 606 சிறார்கள் அனா தைகளும் ஆக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. வன்முறையில் வீடுகள், கட்டடங்கள் தீ வைக்கப்பட்டதுடன், பலரும் உயிருடன் எரித்துக் கொல்லப் பட்டும், பெண்கள் கூட்டாக பாலியல் வன்கொடுமைக்கும் ஆளானார்கள் என்று கூறியுள்ளது. இதையே பல இந்திய ஊட கங்கள் சரியான புள்ளிவிவரம் என்று தெரி வித்துள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner