எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* கல்வியில் ஆர்.எஸ்.எஸின் 11 அம்சத் திட்டம்

* இந்திய மயமாக்குதல் என்ற பெயரில் இந்துத்துவ மயமாக்கும் சதி

குருகுலக் கல்வி என்ற ஒரு திட்டத்தை ஏற்கெனவே அறிவித்த மத்திய பி.ஜே.பி. அரசு - இப்பொழுது ஆர்.எஸ்.எஸ். 11 அம்சங்களை உள்ளடக்கிய பார்ப்பனிய - மனுதர்ம கல்வித் திட்டத்தை உருவாக்கி, அதனை செயல்படுத்திட உத்தரவு பிறப்பிக்கும் பாணியில் மத்திய பி.ஜே.பி. அரசுக்கு அனுப்பியுள்ள ஆபத்தினை சுட்டிக்காட்டி, இதனை முளையிலேயே கிள்ளி எறிய ஆயத்தமாக வேண்டும் என்று எச்சரித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

மத்திய கல்வித் துறையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொடுங்கரம் ஆக்டோபஸ்' - எட்டுக்கால் பிராணி போல் ஒவ்வொரு நாளும் நீண்டு கொண்டே போகிறது!

ஏற்கெனவே குருகுல முறை என்ற பெயரில் சமஸ்கிருதம், வேதங்கள் படிப்பை தனியாரிடம் படித்ததாக, தானே சான்றிதழ் வழங்கி, உடனடியாக பத்தாம் வகுப்பு (X Standard) சேர்ந்து 12 ஆம் வகுப்புவரை படித்து, உடனே (அவாள்) வேலைக்குப் போகும் வண்ணம் கல்வித் திட்டத்தைத் திணிக்கும் முயற்சியில் மத்திய பி.ஜே.பி. ஆட்சி ஈடுபட்டது. குலக்கல்வித் திட்டத்தைவிட பல மடங்கு ஆபத்தான சமஸ்கிருத, வேத மய ஆரம்பக் கல்வித் திட்டம் ஒன்று உருவாவதை எதிர்த்து, கருவிலேயே அதனை அழித்து, தடுத்துக் காப்பாற்றிட வேண்டிய கடமை அனைத்து முற்போக்காளர்கள், சமதர்மவாதிகள் கல்வியாளர்களின் பெரும் பொறுப்பாகி வரும் நிலையில், இன்று (3.7.2018) தி எகனாமிக் டைம்ஸ்' நாளேட்டில் வந்துள்ள செய்தி மேலும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியைத் தந்துள்ளது!

ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியுள்ள 11 அம்ச கல்வித் திட்டம்

பகிரங்கமாகவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பினால் உருவாக்கப் பட்ட 11 அம்ச செயல் திட்டம்- கல்வியை இந்திய மயமாக்குதல் பாரதீயக்காரன்'' (Bharatiyakaran) என்ற திட்டத்தை, மத்திய கல்வி இலாகாவான மனித வள மேம்பாட்டுத் துறைக்கு அனுப்பியுள்ளது.

வார்தாவில் உள்ள மகாத்மாகாந்தி இண்டர்நேசனல் இந்தி யுனிவர் சிட்டியில் கூடி முடிவெடுத்துள்ளது. ஆர்.எஸ்.எஸின் துணை அமைப்புகளில் ஒன்றான பாரதீய ஷிக்ஷான்   மண்டல்'' மத்திய கல்வி அமைப்புக்கு அனுப்பியுள்ளது. தனது 11 அம்சத் திட்டத்தை, ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக்'' பிறந்த நாளான அக்டோபர் 11 ஆம் தேதிமுதல் இந்தப் புதிய கல்வித் திட்டத்தை அமுல்படுத்த ஆவன செய்ய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை (HRD) முன்வரவேண்டும்  என்று உத்தரவு போடும் பாணியில் செய்திகள் வந்துள்ளன!

அர்த்த சாஸ்திரம், சுக்ர சாஸ்திரம் போதிக்கப்பட வேண்டுமாம்!

படிப்பு தற்போது அய்ரோப்பிய, அமெரிக்க முறையில் இருப் பதை அறவே மாற்றிவிட்டு, நமது புராதன சாஸ்திரங்களையே பாடங்களாக உயர் கல்வித் துறையில் பல்கலைக் கழகங்களில் போதிக்கத் திட்டமிட்டு அதற்கேற்ப பாடத் திட்டங்களை மாற்றி அமைக்க ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பான (BSM) பாரதீய ஷிக்ஷான் மண்டல் உத்தரவிடும் பாணியில் பேசுகிறது!

1. சாணக்கிய நீதி சாஸ்திரம்

2. பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம்

3. சுக்ரநீதி சாஸ்திரம்

போன்றவற்றையே சொல்லிக் கொடுக்கவேண்டும்!

சமஸ்கிருத மயம், இந்துத்துவ - வர்ணாசிரம மயம் - சாணக் கியனின் அர்த்த சாஸ்திரத்தில் ஜாதி அடிப்படையில்,  மனுதர்ம சாஸ்திரத்தின் மறு பதிப்பாகவே பல பகுதிகள் உள்ளன என்பது அதனைப் படித்தவர்களுக்குப் புரியும்.

எனவே, மனுதர்ம யுகத்திற்கு நாட்டை மீண்டும் திருப்பும் வகையில் இந்து ராஜ்ஜியத்தை - ராஷ்டிரத்தை'' அமைக்கவே இந்த அவசரக் கல்வி ஏற்பாடு!

இதில் சூழ்ச்சி ஒன்றையும் மிகவும் தந்திரமாகப் புகுத்தி உள்ளார்கள்.

விஷ உருண்டையில் சர்க்கரைப் பூச்சு

நாராயணகுரு ஜாதி வேற்றுமைபற்றிக் கூறியதையும், ஜோதி பாபூலே கூறிய தொழிலாளர் சீர்திருத்தங்களையும் கூட பாடத் திட்டத்தில் சேர்த்து (அவர்கள் கூறிய மற்ற புரட்சிகரமான பார்ப்பனிய எதிர்ப்பு - சமூகநீதி - பெண் கல்வி இவையெல்லாம் புறந்தள்ளி) ஏதோ ஒன்றை ஒப்புக்கு விஷ உருண்டைக்குச் சர்க்கரைப் பூச்சு பூசி, இளைய தலைமுறையிடம், பிஞ்சு உள்ளங்களிடம் ஒரு பார்ப்பன - வைதீக - வேதிய - பாடத் திட்டங்கள் என்னும் நஞ்சை உண்ணக் கொடுக்க முனைகிறார்கள்.

இத்திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.

அனைவரும் அணிதிரள்க!

ஆயத்தமாவோம்!!

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

3.7.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner