எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தொடங்கப்படாத ஜியோ தலைசிறந்த பல்கலைக் கழகமாம்

மனித வள மேம்பாட்டுத் துறைக்குப் பலத்த கண்டனம்

புதுடில்லி, ஜூலை 20 முதன்மையான பல்கலைக் கழகங்களின் பட்டியலிலிருந்து அண்ணா பல்கலைக் கழகம் நீக்கப்பட்டுள்ளது. தொடங்கவே படாத ஜியோ பல்கலைக்கழகம் தலைசிறந்த முதன்மையான பல்கலைக் கழகப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் இந்தப் போக்குக்குப் பலத்த கண்டனமும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.

அண்மையில் மத்தியஅரசின் மனிதவள மேம்பாட் டுத் துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) முதன்மையான தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் என்று ஆறு கல்வி நிறுவனங்களின் பெயரை அறிவித்தது.

அந்த பட்டியலில் தமிழ்நாட்டின் தலைசிறந்த  அரசின் பல்கலைக்கழகமும், அப்துல் கலாம் தம்மு டைய குடியரசுத் தலைவர் பதவிக்காலத்திற்கு பின்பு ஆர்வத்துடன் பேராசிரியராக  பணியாற்றிய பல்கலைக் கழகமுமாகிய அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர் இடம்பெறவில்லை.

மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக்குழு   சார் பில் அமைக்கப்பட்ட அதிகாரமிக்க வல்லுநர் குழு நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் தலை சிறந்த நிறுவனங்களைத் தேர்வு செய்து யுஜிசியிடம் அதன் பட்டியலை அளித்தது. அந்த பட்டியலில் எட்டு உயர் கல்வி நிறுவனங்கள் இருந்தன. அதிகாரமளிக்கப்பட்ட வல்லுநர்குழு 21 பக்க அறிக்கையை யுஜிசியிடம் அளித்தது. அப்பட்டியலில் எட்டு பொதுத்துறை கல்வி நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. வல்லுநர் குழு அளித்த அறிக்கையின்படி, பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (அய்அய்எஸ்சி), இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களாகிய சென்னை அய்.அய்.டி, காரக்பூர் அய்.அய்.டி, மும்பை அய்.அய்.டி, டில்லி அய்.அய்.டி, டில்லி பல்கலைக்கழகம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியல் இடம்பெற்றி ருந்தன.

2018ஆம் ஆண்டில் க்யூஎஸ் பன்னாட்டு பல்கலைக் கழகங்களின் நிறுவனத்தின் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றிருந்த மும்பை அய்அய்டி, டில்லி அய்அய்டி, பெங்களூரு அய்அய்எஸ்சி ஆகிய மூன்றும் யுஜிசியின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. யுஜிசி வெளியிட்ட பட்டியல் விவரம் வருமாறு:

கருநாடகா மாநிலத்தில் பெங்களூருவில் இயங்கி வருகின்ற மத்திய அரசின் கல்வி நிறுவனமாகிய  1.இந்திய அறிவியல் பயிற்சி நிறுவனம் (அய்.அய்.எஸ்.சி.) 2.மும்பை அய்.அய்.டி.

3.டில்லி அய்.அய்.டி.

ஆகிய மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பசுமைவெளி வகைப்படுத்தலின்கீழ் தனியார் நிறு வனங்களாகிய

4. மராட்டிய மாநிலத்திலுள்ள ஜியோ நிறுவனம் (தொடங்குவதற்காக உத்தேசத்தில் உள்ள நிறுவனம்)

5. மணிபால் உயர் கல்வி நிறுவனம் 6. கோவா பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம் (பிட்ஸ்) ஆகிய ஆறு உயர் கல்வி நிறுவனங்கள் மட்டுமே யுஜிசியால் அறி விக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இயங்கிவரும் அண்ணா பல்கலைக் கழகம், மத்திய அரசின் நிறுவனமாகிய இந்திய அறி வியல் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை (அய்.அய்.டி.) ஆகிய இரண்டு கல்விநிறுவனங்களின் பெய ரும்,  தேர்வு செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களின் பெயர்ப்பட்டியலில் இடம்பெற்றிருந்தும், இவ்விரண் டையும் புறக்கணித்துவிட்டு, ஆறு நிறுவனங்களின் பெயர்ப்பட்டியலை மட்டும் யுஜிசி வெளியிட்டுள்ளது.

எம்.அனந்தகிருஷ்ணன்

அண்ணா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தரும், கான்பூர் அய்.அய்.டி.யின் தற்போதைய இயக்குநருமாகிய எம்.அனந்தகிருஷ்ணன் கூறியதாவது:

சாதாரணமானவற்றிலிருந்து அதிகப்படியானவற்றை அடையாளம்கண்டுதேர்வுசெய்யப்படுவதுதான்இதன் நோக்கமாகும். அய்அய்டி, அய்அய்எஸ்சி நிறுவனங் களுடன் மணிப்பால் பல்கலைக்கழகம், பிட்ஸ் பிலானி நிறுவனங்களை ஒப்பிடுவது கேலிக்குரியது. பன்னாட்டளவில் அதிக அளவிலான ஆய்வு முடிவு களை வெளியிடுகின்ற நிறுவனங்களுக்கு மட்டுமே இதுபோன்ற அந்தஸ்து அளிக்கப்படும். தனியார் நிறுவனங்களைவிட, சென்னை அய்.அய்.டி. மிகவும் சிறப்பானது என்றார். மேலும் அவர் கூறியதாவது: இனிமேல்தான் தொடங்கப்பட வேண்டிய ஒரு நிறுவ னத்தை, தன்னாட்சி நிறுவனமாக உருவாக வேண்டிய நிறுவனத்துக்கு அதிவேகமாக சிறந்த நிறுவனமாக தேர்வு செய்வது என்று யுஜிசி முடிவெடுத்துள்ளது. பல ஆண்டுகளாக இருந்துவருகின்ற நிறுவனங்கள்கூட பன்னாட்டு தரவரிசையில் பட்டியலிடப்படாமல் இருந்துவருகின்றன என்றார்.

உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால்

மாநிலஉயர்கல்வித்துறைசெயலாளர்சுனில்பாலி வால்கூறுகையில், முதல்கட்ட பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் இடம் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறந்த நிறு வனம் என்பது எப்போதுமே அனைவருக்கும் தெரியும். ஆனால், தற்பொழுது நாடுமுழுவதுமுள்ள முதல் எட்டு பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. தலைசிறந்த நிறுவன அந்தஸ்து பெறுவதுமட்டும்தான் பிரச்சினையாகி உள்ளது என்றார்.

மேனாள் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

திமுக போன்ற எதிர்க்கட்சிகள் யுஜிசியின் முடிவை ஏற்கத்தயாராக இல்லை.

மேனாள் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:

பன்னாட்டு தரம் பெறவில்லை என்று குறிப்பிட்டு, இரண்டு நிறுவனங்களையும் பட்டியலிலிருந்து நீக்குவது சரியல்ல. இதுபோன்ற நிறுவனங்களை மறுப்பதன்மூலம்     மாணவர்கள் முறையாகப் பெறவேண்டிய நிதியை, அவர்களுக்குரிய உரிமையின்படி அளிக்க வேண்டிய உதவிகளை அளிக்க மறுப்பதாகும். மத்திய அரசிடம் இதுகுறித்து கேள்வி எழுப்புவோம். இதை எதிர்த்துப் போராடாமல் இருப்பது கெட்ட வாய்ப்பாகும்என்றார்.

யுஜிசி தலைவர் டி.பி.சிங்

யுஜிசி தலைவர் டி.பி.சிங் கூறியதாவது:

அனைவருக்கும் சம பங்கு அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் நோக்கம். இந்த அய்ந்து பொதுத்துறை நிறுவனங்களும் பின்னாளில் பெரிய அளவில் ஆணை யத்தால் கருத்தில் கொள்ளப்படும். அது எப்போது நடக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது என்றார்.

வல்லுநர் குழுவின் தலைவர் என்.கோபாலசாமி

வல்லுநர் குழுவின் தலைவர் என்.கோபாலசாமி பன்னாட்டு தரவரிசை கணக்கில் கொள்ளப்பட்டது என்று கூறினார். அவர் கூறியதாவது: வெளிநாட்டு ஆசிரியர்கள், மாணவர்கள் அங்கம் பெற்றிட வேண்டும்.   சென்னையை பலரும் தேர்வு செய்வதில்லை. அதற்கு காரணம் மிகவும் வெம்மையாக இருப்பதுதான். அதற்குப்பதிலாக தங்களின் உடல்நலுனுக்கேற்ற கால நிலையைக் கொண்டுள்ள பகுதியையே தேர்வு செய் கிறார்கள். அதுமட்டுமல்லாமல் தனித்தனியே ஆராய்ச் சிகள் செய்யவேண்டும். சென்னை அய்அய்டி சிறந்ததாக இருக்கலாம். ஆனால் பன்னாட்டு தரவரிசையில் அவர்களும் பின்தங்கியே இருக்கிறார்கள் என்றார்.

சென்னை அய்அய்டி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி

சென்னை அய்அய்டி இயக்குநர் பாஸ்கர் ராம மூர்த்தி கூறியதாவது: கடைசி பட்டியல் எட்டு நிறுவ னங்களில் சென்னை அய்அய்டி இடம்பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற காத் திருக்க வேண்டும்.

எங்களாலும் தலைசிறந்த நிறுவனங்களின் பட்டிய லில் இடம் பெற முடியும் என்று நம்புகிறோம். எங்களு டைய பணிகளில் தெளிவான பாதையை அளித்து வருகிறோம். வெளிப்படையாகச் சொல்வதென்றால், பன்னாட்டு தரவரிசையில் இடம்பெற என்ன செய்ய வேண்டும், மாணவர்களின் தகுதிநிலையை உயர்த்து வதும் எப்படி என்று எனக்குத் தெரியவில்லை என்றார்.

தமிழ்நாடு புறக்கணிப்பு

மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக்குழு  சார்பில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவால் பரிந்து ரைக்கப்பட்ட எட்டு கல்வி நிறுவனங்களில் இடம்பெற்ற தமிழ்நாட்டின் இரண்டு கல்வி நிறுவனங்களும் யுஜிசி யால் நிராகரிக்கப்பட்டதற்கு கல்வியாளர்கள் வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் கடுமை யான எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது-. தமிழ்நாடு மாநிலத்தையே மத்திய அரசு புறக்கணிக்கின்ற உள் நோக்கம் வெளிப்பட்டுள்ளது-.

முக்கிய திருத்தம்

நேற்று (19.7.2018) சென்னை பதிப்பு விடுதலை'யில் உச்சநீதிமன்றத்தில், தலைமை நீதிபதி தலைமையில் அமைந்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வில், நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள் தீர்ப்பைப் போல ஒரு தோற்றத்தைத் தந்ததால், நாம் அதனைத் தீர்ப்பு என்று எழுதிவிட்டோம். அது தீர்ப்பல்ல; தீர்ப்பு இன்னும் வரவில்லை. நீதிபதிகளின் கருத்து - வழக்கு விசாரணையில்! தவறுக்கு வருந்துகிறோம்.

- ஆசிரியர் விடுதலை'

கழகத் தலைவர் அறிக்கைக்கு வெற்றி!

திருப்பூர் அருகே திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமையலர் பாப்பம்மாள் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்று (19.7.2018) அறிக்கை வெளியிட்டார். அதில் போராட்ட அறிவிப்பும் இருந்தது.

இந்த நிலையில், அருந்ததிப் பிரிவைச் சேர்ந்த பெண்ணின் மாறுதல் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

இந்நாள்...இந்நாள்...

1969 - ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதலடி எடுத்து வைத்த நாள்
1982 - மம்சாபுரத்தில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர்   கி.வீரமணி தாக்குதலுக்கு உள்ளாதல்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner