எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லண்டனில் காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி கண்டனம்

லண்டன், ஆக.26 இந்தியா முழுவதும் தாங்கள் விரும்பும் ஒரே கலாச்சாரத்தைத் திணிக்க ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது என்றார் காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி.

ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரசு தலை வர் ராகுல் காந்தி, நேற்று லண்டனில் வெளிநாடு வாழ் காங்கிரசுகாரர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

இந்தியா முழுதும் ஒரே மாதிரியான கலாச் சாரத்தை அமல்படுத்த ஆர்.எஸ்.எஸ் அமைப் பினர் முயற்சி செய்து வருகிறார்கள். அந்த முயற்சி நாக்பூரில் இருந்து தொடங்கி நடை பெற்று வருகிறது.

மோடி பிரதமராக பதவியேற்பதற்கு முன் பாக இந்தியாவில் எந்த திட்டமும் செயல் படுத்தப்படவில்லை என கூறுகிறார். காங் கிரசை விமர்சிப்பதாக நினைத்து அவர் கூறியது ஒவ்வொரு இந்தியரையும் அவமானப்படுத்துவது போல் ஆகும்.

எவ்வித உதவிகளும் கிடைக்காமல் தாழ்த் தப்பட்டவர்கள், விவசாயிகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மை மக்கள் அவதிப்படு கின்றனர். எஸ்சி,எஸ்டி வன்கொடுமைத் தடுப் புச் சட்டம் ஒழிக்கப்பட்டது. உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. மக்களின் உரிமைக்காக குரல் எழுப்பினால் அவர்களின்மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. தற்போதைய இந்தியாவில் ஜாதி, மதங்களை அடிப்படையாக வைத்து பாகுபாடு காட்டப்படுகிறது. பட்டியல் இன மக்களுக்கு பெரும் துரோகம் இழைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அனில் அம்பானி போன்ற பணக்காரர்களுக்கு மட்டும் நன்மை நடக்கிறது ரூ.45 ஆயிரம் கோடி அனில் அம்பானிக்கு மட்டும் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 50 ஆண்டுகாலமாக விமான தயா ரிப்பில் ஈடுபட்டு வரும் இந்துஸ்தான் ஏரோ னாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு ரபேல் விமான தயாரிப்பு ஒப்பந்தங்கள் வழங்கப்படவில்லை. ஆனால், ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு 19 நாள்களுக்கு முன்னதாக தொடங்கப்பட்ட யாரோ ஒருவரின் நிறுவனத்துக்கு விமான தயாரிப்பு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் நாள்தோறும் வெறும் 450 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் அதே வேளையில் சீனாவில் நாள்தோறும் 50 ஆயிரம் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படு கின்றன. இந்தியாவில் வேலையில்லாத் திண் டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது.  இந்தியாவின் சுவர்களாக விளங்கும் உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி போன்ற அமைப்பு களுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. தங்களை பணி செய்ய அனுமதிக்கவில்லை என வரலாற்றில் முதன் முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் வெளிப்படையாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner