எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அதிகாரிகள் எதிர்த்தும் பிரதமர் மோடியின் தலையீட்டால் விபரீதம்

புதுடில்லி, ஆக. 31 கல்வித் தரத்தை உயர்த்த சிறந்த பல்கலைக் கழகங்களைத் தேர்தெடுத்து அவைகட்கு சிறப்புத் தகுதி வழங்கும் விதிமுறையின்படி கடந்த 8.7.2018 அன்று மனிதவளத் துறை வெளி யிட்ட பட்டியலில் ஜியோ இன்ஸ்டிட்யூட்  உள்ளிட்ட 3 தனியார் பல்கலைக் கழ கங்கள் மற்றும் 3 அரசு பல்கலக் கழ கங்களுக்கும்  சிறப்புக் கல்வி நிறுவனம் என்ற தகுதி அளிக்கப்பட்டது. மனித வளத் துறையின் இந்த நடவடிக் கையால் நாடு முழுவதும் கல்வி நிறுவ னங்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் கடுமை யான விமர்சனத்தை  உண்டாக்கியுள்ளன.

பிரதமர் தலையீட்டால் முறை தவறி மானிய உதவிகளால் - அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பல்கலைக்கழக மானிய வாரியம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் முன் னேறும் சிறந்த பல்கலைக்கழக அந்தஸ்து பெறுவதற்கான விதிமுறைகள் தெரி விக்கப்பட்டிருந்தன. இந்த விருது பெறும் பல்கலைக்கழகங்கள் உலகத் தரத்தில் உயர நிதி உதவியை தடை இன்றிப் பெறலாம் என்பதும் அந்த விதி முறைகளில் ஒன்றாகும். அத்துடன் இந்த பல்கலைக் கழகங்கள் பல புதிய பாடத் திட்டங்களையும் தொடங்க அரசு உடன டியாக அங்கீகரிக்கும் என்பதும் மற் றொரு விதிமுறை ஆகும்.

தகவல் அறியும் சட்டத்தின்மூலம் தகவல்

இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ்  தி இண்டியன் எக்ஸ்பிரஸ்' சார்பில் விளக்கம்கேட் கப்பட்டது.  கேட்ட கேள்விகளுக்கு விளக்கம்  அளித்த மனிதவளத் துறை கூறியதாவது:

நிதித்துறை அமைச்சகமும், மனித வளத்துறை அமைச்சகமும் முன்பு கொடுத்திருந்த பட்டியலில் இடம்பெறாத சில புதிய பெயர்கள்குறித்து கடும் எதிப்பு தெரிவித்திருந்தன. ஆனால், இந்த எதிர்ப்புகள் குறித்து மோடி அலு வலகம் பொருட்படுத்தவில்லை.

இதனை அடுத்து அவசர அவசரமாக  ஜூலை மாதம் 9-ஆம் தேதி மூன்று அரசு மற்றும் மூன்று தனியார் பல்கலைக் கழகங்கள் அந்தஸ்து பெற்றுள்ளதாக வாரியம் அறிவித்தது. இப்பட்டியலில் மோடியின் நெருங்கிய நண்பரான முகேஷ் அம்பானியின் துவக்கப்படாத, பதிவே செய்யப்படாத, வெறும் பேச்சில் மட்டுமே இருக்கும்  ஜியோ இன்ஸ்டி டியுட் பெயரும் இருந்தது.  இது முழுக்க முழுக்க மோடியின் நேரடித்தலையீட்டின் காரணமாகவே துவங்கப்பட்டது. மேலும் இந்த அறிவிப்புகள் அறிவிப் பதற்கு முன்பு நடந்த கூட்டத்தில், மனித வள மேம்பாட்டுத் துறையின் அதி காரிகளும் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோஇன்ஸ்டியூட் எந்த ஒரு விதிமுறையின் கீழும் தகுதியானது அல்ல, அதை பரிசீலனைக்கு எடுத்ததே தவறு; இதனால், நல்ல நிலையில் இயங்கிவரும் கல்வி நிறுவனங்கள் பாதிக்கப்படும். இதன் பாதிப்பு கல்வி பயிலும் மாணவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறினர். சில அதி காரிகள் வெளிநடப்பும் செய்தனர். ஆயினும் இந்த எதிர்ப்புகளை பிரதமர் அலுவலகம் நேரடியாகவே  கண்டு கொள்ளவில்லை. மனிதவளத் துறை அதிகாரிகளின் இந்த கூட்டத்தின் முடிவு குறித்து மோடி நேரடியாக அலட்சியம் செய்துவிட்டு, அமைச்சரின் மூலம் பட்டியலை வெளியிட உத்தர விட்டார்.

மேலும் ஆங்கில நாளேட்டில் எழுதி யுள்ளதாவது: பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனம் அமைக்கப்பட்ட இடம், கட்டட வசதிகள், அவர்களுக்கு தொடர்ந்து வரும் பொருளாதார மூலம், கையிருப்பு தொகைகள். செலவு செய்யும் திட்டம் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். அதே போல் கண்காணிப்பு அதிகாரம், சுதந்திரமான தணிக்கை குழு, மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை, மாணவர்களின் கல்வித்தரம், பயின்ற மாணவர்களில் உயர் பதவிகள் மற்றும் பெரு நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் பட்டியல் போன்ற பல விதிகள் இருக் கும்போது நிலமே கையப்படுத்தப்படாத அம்பானி மனைவியின் கனவில் மட்டும் இருக்கும் ஜியோ என்ற கல்வி நிறுவனத்திற்கு சிறப்பு தகுதி வழங்கப் பட்டது எவ்வாறு என்று கேள்வி எழுப்பியுள்ளது.

விவாதத்திற்கு உரிய மூன்று கல்வி நிறுவனங்கள்

ரிலையன்ஸ் ஜியோ இன்ஸ்டியூட் மட்டுமல்லாது தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு தனியார் கல்வி நிறுவனங்களுமே பெரும் முறைகேடுகளுக்கு உள்ளான வைகள்தான்.

பிஆர்டி பிலானி கல்வி நிறுவனம் விதிமுறைகளை மீறி பல நகரங்களில் கிளைகளைத் திறந்தது. இதனை அடுத்து பல்கலைக்கழக மானியக்குழு இந்த நிறுவனத்தின் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் இவர்களின் புதிய நிறுவனங்களுக்கு தடை விதித்து மாணவர் சேர்க்கையும் நிறுத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது. இதை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரகம் கருத்தில் கொள்ளவில்லை.

அதே போல் மணிப்பால் தொழிநுட்ப நிறுவனமும் 2010 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் விதிமுறை மீறல்கள் தொடர்பாக கருநாடக அரசின் கடுமையான எச்சரிக்கையைப் பெற்றுள்ளன.

இதுதொடர்பாக மாநில கல்வி அமைச்சரும் மணிப்பால் கல்வி நிறுவனத்தின் விதிமீறல் குறித்து 2010- ஆம் ஆண்டு கருநாடக சட்டப்பேரவையில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, இப்படி விதிமுறை மீறல்களை நடத்திய கல்வி நிறுவனங்களுக்கும், துவங்கப்படாத கல்வி நிறுவனங்களுக்கும் சிறப்பு தகுதி வழங்குவது குறித்த முடிவை நிதித்துறை மற்றும் மனிதவளத்துறை அமைச்சகத்தின் எதிர்ப்பையும் மீறி மோடியின் நேரடி தலையீட்டின் கீழ் வழங்கியுள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner