எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழர் தலைவர் பேட்டி

சென்னை, அக்.5 தமிழகத்தில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித் துள்ளது மீண்டும் ஒரு விவசாயப் போராட்டத்துக்கு வழிவகுத்திருக்கிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

சென்னை பெரியார் திடலில் 3.9.2018 அன்று மனுதர்ம ஆராய்ச்சி ஆய்வு தொடர் சொற்பொழி வின் முதல் நாள் உரையைத் தொடர்ந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.

அதன் விவரம் வருமாறு:

செய்தியாளர்: தமிழகத்தில் மீண்டும் மூன்று இடங் களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தொடர்ந்து 500 நாள் களுக்கும் மேலாக நெடுவாசல், கதிராமங்கலம் பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் தொடர்ந்து தமிழகத்தின் வளங்கள் எடுக்கும் நிலைகுறித்து...?

தமிழர் தலைவர்: தமிழகத்தில், தமிழகம் தங் களுக்கு வாக்களிக்காது, என்ன செய்தாலும் பாஜக இங்கு வரமுடியாது, காலூன்ற முடியாது என்பதைப் புரிந்துகொண்டு தமிழகத்தைப் பழிவாங்கவேண்டும் என்பதற்காக,  டில்லியிலே போராட்டம் நடத்தும் விவசாயிகளை விரட்டியடிக்கிறார்கள். அங்கே வெளிப்படையாகச் செய்கிறார்கள். இங்கே மறை முகமாக ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங் களையெல்லாம் கொண்டு வந்து மீண்டும் மீண்டும் திணிக்கிறார்கள். இங்கே ஒரு அரசு கடுமையாக இருக்கக்கூடிய வாய்ப்பு இல்லாது, தலையாட்டி அரசாகவும், அங்கே உத்தரவு போட்டால் உடனே கீழ்ப்படியக்கூடிய ‘Your most obedient Servant’ என்று சொல்லக்கூடிய, மாநில உரிமைகளை மிகப்பெரிய அளவிற்கு விட்டுக்கொடுத்தும், இழந்து கொண்டிருக்கும் ஒரு அரசாக இருக்கிற காரணத்தால், இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. இது மீண்டும் ஒரு விவசாயப் போராட்டத்துக்கு வழிவகுத்திருக்கிறது. இந்த சுவரெழுத்தை டில்லி புரிந்து கொள்ள வேண்டும்.

செய்தியாளர்: திரைப்படங்களில் நடிகர் விஜய் தன்னால் முதல்வராக நடிக்க முடியும் என்று சொல் லியிருக்கிறார். அதற்கு தற்பொழுது இருக்கக்கூடிய அமைச்சர்கள் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டு வருகிறார்கள். சரியாக ஆண்டு கொண்டி ருக்கும் பொழுது அவருக்கு ஏன் இந்த ஆசை என்று கேட்கிறார்களே?

தமிழர் தலைவர்: நிழலைக் கண்டுகூட பயப்படு பவர்கள் நம்முடைய அமைச்சர்கள். ஆகவே, அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner