எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மக்களைத் தூண்டிவிடலாமா?

சபரிமலை அய்யப்பன் கோவிலில் எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை அமல்படுத்துவதற்கு கேரள அரசிற்கு, மத்திய அரசு துணை நிற்கவேண்டுமே தவிர குறுக்குசால் ஓட்டக்கூடாது என்று  திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

தமிழ்நாட்டு பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை அவ்வப்போது  துடிப்போடும், ஆவேசத்தோடும் - அரசி யல் கட்சித் தலைவர் என்ற முறையிலும், ஆட்சியில் (தமிழ்நாட்டில்) இல்லாமலேயே ஆட்சி நடத்திடும் பிரதமர் மோடி - அமித்ஷா கட்சியின் முக்கிய பொறுப்பாளர் என்ற முறையிலும் பல கருத்துகளை - பல பேட்டிகளில் கூறிக்கொண்டே இருப்பார்.

அது அவரது அரசியல் ப()ணி, ஒப்புக்கொள்ளுகிறோம்.

சடங்கு, சம்பிரதாயம் என்ற பெயரால்...

ஆனால்,சபரிமலைஅய்யப்பன்கோவிலுக்குஎல்லா வயது பெண்களும் செல்லலாமா? கூடாதா? என்பதுபற்றி உச்சநீதிமன்றத்தில் வந்த வழக்கில், சனாதனிகளும், பழைமை சம்பிரதாய விரும்பிகளும், பிரபல'' வழக்குரை ஞர்களையெல்லாம் வைத்து வாதாட வைத்த நிலையில்,   5 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சட்ட அமர்வில், 4 நீதிபதிகள் பெரும்பான்மைக் கருத்துகளைத் தீர்ப்பாக எழுதி, அதில் மூத்த வழக்குரைஞர்களின் வாதங்களையெல்லாம்பற்றி விவாதித்து இறுதித் தீர்ப்பு தந்துள்ள நிலையில், வெறும் சடங்கு, சம்பிரதாயம் என்ற பெயரில், கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. (வாக்கு வங்கிக்காக அங்குள்ள காங்கிரசு கட்சியும்) கேரள மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியைக் கவிழ்க்க, இதனை ஒரு சாக்காகக் கொள்வதோடு, போராட்டம் என்ற பெயரில் - உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டி அரசியல் சட்டக் கடமையைச் செய்துவரும் கேரள கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சியைப் பறிக்க ஈடுபடுவது எவ்வகையில் நியாயம்?

ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. தலைகீழ் பல்டி!

2006 இல் இதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சபரிமலைக் கோவிலுக்குள்அனைத்துவயதுபெண்களும்அனுமதிக் கப்படவேண்டும்என்றகோரிக்கையைவைக்கவில் லையா?இப்போதுதிடீரென்று ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. தலைகீழ் பல்டி (About Turn) எடுப்பது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டதல்லவா!

நாத்திகர்களுக்கு அந்தக் கோவிலுக்குள் செல்ல முயற்சிப்பதற்கு  உரிமையில்லை என்று டாக்டர் தமிழிசை அவர்கள் கூறியுள்ளார்.

அப்படியே பார்த்தாலும் இந்து மதத்தில் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர்களும் இருக்கலாம்; கடவுளைக் கும்பிடும் ஆத்திகர்களும் இருக்கலாம் என்பதை அவர் அறிந்து பேசவில்லையே!

வி.டி.சாவர்க்கர் - நாத்திகர் என்பதையாவது இன்றைய பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அறிவார்களா?

அவர்கள் - பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி யினர் - பெரிதாக எடுத்துப் பேசும் கடவுள் இராமன்.

1. இராமாயணத்தில், தசரதன் காலத்திலிருந்து இராமன் காலத்திலும், 'ஜாபாலி' என்ற நாத்திகன்தான் முக்கிய மந்திரியாக இருந்தவன் என்பதை இவர் அறிவாரா?

2. சக்ரவர்த்தி திருமகன்' என்ற தலைப்பில் இராமாயணம் எழுதிய மதிப்பிற்குரிய ராஜகோபாலாச்சாரியார்கூட, தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டின் ஜாபாலி' என்று  கல்கி' ஏட்டில் படம் போட்டு வாழ்த்துச் சொன்னது இவர் போன்ற பக்தைகளுக்குத் தெரியாமல் இருக்கலாம்.

3. புத்தரின் மதத்தை இந்து சட்டத்தின்கீழ், இந்து மதத்தின் ஒரு பகுதியே! புத்தர் மகாவிஷ்ணுவின் 9 ஆவது அவதாரம் என்றெல்லாம் (டாக்டர் இராதாகிருஷ்ணன் உள்பட) பல அறிஞர்கள் எழுதி, இன்னும் அதன் தன்மையை  மழுங்கடித்து, அணைத்து அழித்துவிடும் நிலை உள்ளதே - அந்த பவுத்தம் - புத்தநெறி கடவுள் நம்பிக்கையை, ஆத்மா நம்பிக்கையை ஏற்கும் மதமா? நெறியா? அது எப்படி இந்து மதம்?

4. சார்வாகப் பிரிவு என்று முன்பே வேதத்தை மறுத்தவர்களைப்பற்றிப் பேசுகிறீர்களே, அவர்கள் யார்?

5. அதெல்லாம்கூட பழைய கதை. இந்துத்துவா'வின் தந்தைகளில் ஒருவரான வி.டி.சாவர்க்கர் - நாத்திகர் என்பதையாவது இன்றைய பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அறிவார்களா?

'தினமணி'யின் விசித்திர யோசனை!

தினமணி' நாளேடு (20.10.2018) எழுதியுள்ள தலையங்கத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்காமல், பெண்களை 10 வயதுக்கு மேற்பட்டு 50 வயதுக்கு உள்பட்ட பெண்களுக்கு சபரிமலை சாஸ்தாவை'' தரிசிக்க முடியாத சனாதனத்தைப் பாதுகாக்க ஒரு வினோதமான வழி- ஆலோசனை கூறி - புதிய வம்பை மத்திய மோடி அரசு வாங்க ஆலோசனை கூறியுள்ளது!

அவசரச் சட்டம் உடனடியாகக் கொண்டு வந்து உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயலற்றதாக்க வேண்டும் என்று கூறியுள்ளது!

நோயைவிடக் கொடுமையான வைத்தியத்தைக் கூறுகிறது.

அடிப்படையில் அவசரச் சட்டம் கொண்டு வந் தாலும்கூட (தினமணி' ஏட்டினை வழிநடத்தும் திருவாளர் குருமூர்த்தி அய்யரின் யோசனையாகவும் இது இருக்கக்கூடும். அல்லது அதன் ஆசிரியரின் அரிய சிந்தனையாகவும் இருக்கலாம்!) எப்படி இருந்தபோதிலும், இதனால் உச்சநீதிமன்ற அரசியல் சட்ட அமர்வின் பெரும்பான்மை நான்கு நீதிபதிகளின் தீர்ப்பை அவ்வளவு எளிதாக புறந்தள்ளிவிட முடியாது.

இதனை மாற்ற வழி அரசியல் சட்டத் திருத்த நிறைவேற்றம் மூலம்தான் முடியும்.

அவசரச் சட்டம் (Ordinance) கொண்டு வரப்பட் டாலும்கூட -  ஏன் திருத்தம் வந்தால்கூட, அதனை எதிர்த்து நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கவும் கூடுமே! அந்த சட்ட வாய்ப்பு உள்ளதே, மறுக்க முடியுமா?

இதனால் எண்ணெய்ச் செலவே தவிர, தினமணியார் ஆசைப்படி பிள்ளை பிழைக்காது!' புரிந்து

கொள்ளட்டும்!

அரசியல் கடை திறக்க ஆவலாக உள்ள ஒரு பிரபல நடிகர் அய்தீகம் மதிக்கப்படவேண்டும்; அதேநேரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பும் மதிக்கப்படவேண்டும்'' என்று கூறி,

முன்னே பார்த்தால் நாயக்கர் குதிரை; பின்னே பார்த்தால் ராவுத்தர் குதிரை'' போல் என்ற வழக்கில் உள்ள பழமொழிபோல பேசியிருக்கிறார்!

இந்த பிரபல நடிகர் அடிக்கடி இமயமலைக்குச் சென்று தனது 2000 ஆண்டுகள் வாழும் பாபா அல்லது அவரது சமாதியில் தியானம் செய்து திரும்புகிறாரே, அவர் அங்கு போய்ச் சேர, ஆகாய விமானத்தில் ஏறலாமா?

எத்தனைத் தூரமோ அறியேன் பண்டரிபுரம்? என்று அய்தீகப்படிப் பாட்டுப்பாடி பஜனை மூலம் நடந்தே செல்லும் பழைய முறைப்படியா சென்று திரும்புகிறார்?

இதில் அய்தீகம் காப்பாற்றப்படுகிறதா? சதி' என்ற உடன்கட்டை ஏறுதலை ஒழித்துவிட்டார்களே, அது அய்தீக விரோதமல்லவா?

இப்படி எத்தனையோ கேள்விகள் எழும். தேவை யில்லாமல், மகளிர் - மாதவிடாய் வரும் பெண்கள் - வராத பெண்கள் என்று இப்படி ஒரு புதுவகைப் பிரிவினை செய்வது அவர்களை - அவர்கள் இயற்கை நடப்புகளை - உடல்கூற்றை அடிப்படையாகக் கொண்டு அசிங்கப்படுத்தும் செயலாகாதா?

குறுக்குசால் ஓட்டாதீர்!

எனவேதான், மத்தியில் ஆளும் ஒரு ஆட்சி அரசியல் சட்டத்தை, கடமையை அமல்படுத்தவேண்டுமே தவிர, உடைத்தெறியக் கூடாது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த துணை நிற்கவேண்டும்; குறுக்குசால் ஓட்டாதீர்!

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

21.10.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner