எழுத்துரு அளவு Larger Font Smaller Font

விளையாட்டிலும் வர்ணாசிரமக் கண்ணோட்டமா!

கிரிக்கெட் என்றால் வரவேற்பு- முதல் மரியாதையா!

தடகளப் போட்டி வீராங்கனை பானிப்பூரி விற்கிறார்

புதுடில்லி, அக்.30 இந்தியாவில் விளை யாட்டில்கூட வர்ணபேதம். கிரிக்கெட் விளையாட்டு என்றால் கோடிக்கணக்கான ரூபாய் பண மழையாகப் பொழிவதும், தடகள வீரர்கள் குல்பி அய்ஸ் விற்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

அரியானாவைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரர் தினேஷ். இந்திய தேசி யக் கொடியை உலக விளையாட்டு அரங்கில் பறக்க விட்ட விளையாட்டு வீரர். ஆனால், தற்போது அரியானா பிவானி மாவட்டத் தெருக்களில் தள்ளு வண்டியில் அய்ஸ் விற்று வருகிறார். இந்தியாவில் நடந்த தேசிய குத்துச் சண்டை போட்டிகள், உலக அளவில் நடந்த ஜூனியர் குத்துச்சண்டை போட்டி களில் வெற்றி பெற்று இந்திய நாட்டு கொடியுடன் கம்பீர நடை போட்டவர். 17 தங்கப்பதக்கம், ஒரு வெள்ளிப் பதக் கம், 5 வெண்கலப் பதக்கம் என்று பதக்கங்களையும் வாங்கி குவித்தவர். இதற்காக இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கி கவுரவிக்கப்படும் உயரிய விருதான அர்ஜுனா விருதையும் குடியரசுத் தலைவரிடம் பெற்றுள்ளார் தினேஷ்குமார். தினேஷ் நல்ல நிலையை அடைந்திருந்தார்.

குத்துச்சண்டை வீரர் தினேஷ் 2014-ஆம் ஆண்டு விபத்து ஒன்றில் சிக்கிவிட்டார். அவர் சென்ற கார், லாரியுடன் மோதியதில் அவர் படுகாயமடைந்தார். இதனால் சில ஆண்டுகள் அவரால் குத்துச்சண்டை விளையாட்டில் ஈடுபட முடியவில்லை. விளையாட்டுத் துறையும் அவரை மறந்துவிட்டது.

மகன் உயிரைக் காப்பாற்ற கடன்

மகனின் மருத்துவ செலவுக்காக லட்சக்கணக்கில் கடன் பட்டு தினேஷை உயிருடன் மீட்டார் அவரு டைய தந்தை. விபத்திற்கு முன்பு தினேஷின் குத்துச்சண்டை  பயிற்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்க அயல் நாட்டிற்குச் செல்ல என பல லட்சங்களை கடனாக வாங்கியும் இருந்திருக்கிறார். அரசியல்வாதிகளுக்கு தாங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதியே மறந்து போகும் நிலையில் இந்தியா விற்காக பதக்கம் வாங்கிக் கொடுத்த தினேஷை மட்டும் நினைவில் வைத் துக் கொள்வார்களா! தினேஷிற்கு அரசுப் பணியோ, எந்தவித நிதியுத வியோகூட செய்யவில்லை. இத னால், குடும்பத்தினரின் கடனை அடைப்பதற்காக வீதியில் இறங்கி குல்பி அய்ஸ் விற்று வருகிறார்.

தள்ளு வண்டியில் குல்பி அய்ஸ் விற்கிறார்

தினேஷ் குல்பி' என்று அச்சடிக்கப் பட்டுள்ள தள்ளுவண்டியில் குல்பி அய்ஸ்களை எடுத்துச் சென்று பிவானி மாவட்ட வீதிகளில் விற்று, அதில் கிடைக்கும் வருமானத்தில் கடனை அடைத்து வருகிறார். தற்போதும் தான் முழு உடல்தகுதியுடன் இருப்பதாகக் கூறும் தினேஷ், ஜூனியர் அளவிலான குழந்தைகளுக்கு குத்துச்சண்டை பயிற்சி அளித்து பதக்கம் வாங்கும் அளவுக்கு தயார்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

அரசு தனக்கு வாய்ப்பு கொடுத்தால் தேசிய அளவில் பதக்கம் பெறும் வகையில் பல வீரர்களைத் தயார் படுத்துவேன் என்றும், தனக்கு அரசுப் பணி ஒதுக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தினேஷ் குமாரின் பயிற்சியாளர் பகவான் சிங் கூறுகையில்,குறுகிய காலத்தில் வேக மாக வளர்ந்த மிகச்சிறந்த வீரர் தினேஷ் குமார். தினேஷிற்கு அரசு நிரந்தரமான வேலையை வழங்கினால் அவர் தனது பிரச்சினைகளிலி ருந்து விடுபட்டு நல்ல எதிர் காலத்தை அமைத்துக் கொள்ள முடியும்'' என்று கூறியுள்ளார்.

படம் 1: 2014 ஆசிய கால்பந்து போட்டிகளில் வென்று பதக்கம் பெற்றுத் தந்த ரஷ்மிதா பத்ரா வெற்றிலை பாக்குக் கடையில் பணி புரிகிறார். படம் 2: ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சீதா பானிப்பூரி விற்கும் அவலம்.

வெளிநாட்டைப் பாரீர்!

விளையாட்டுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் அயல்நாடுகள் சிறந்த மரியாதையை வழங்குகின்றன. இந்தியாவில் விளையாட்டு வீரர்கள் சொந்த முயற்சியில் மட்டுமே பிராகாசிக்க முடி கிறது. அப்படி இந்தியாவிற்குப் பெருமை சேர்ப்பவர்களை எளிதில் கடந்து போய்விடும் நிலை மாற வேண்டும். சமூக வலைதளத்தில் வைரலாகி யுள்ள தினேஷ்குமாரின் புகைப்படத்தைப் பார்த்த பின்னராவது அவருக்கு உரிய உதவியை செய்ய அரசு முன்வருமா? இந்தியாவில் மண்ணின் மைந்தர்களாக இருக்கும் மக்க ளில் மிகக்குறைந்த அளவினர் பல்வேறு தடைகளையும் மீறி உயர்ந்த இடத்திற்கு வந்தாலும், அவர்களை ஏதாவது ஒரு காரணம் சொல்லி, அவர்களை முன்னேறவிடாமல் செய்வதில் தொடர்ந்து மேலிடம் முனைப் புக் காட்டுகிறது.   சமீபத்தில் உலக சாதனை நிகழ்த்திய ஹேமா தாஸ் என்பவருக்கு வெறும் ரூ.50,000 கொடுத்த அரசு, பூப்பந்தாட்டம் மற்றும் கிரிக்கெட்டில் விளை யாடிய வீரர்களுக்கு கோடிக் கணக்கில் ரூபாய்களும், குடியி ருக்க வீடும், நவீன கார்களை யும் வழங்கியது.

பானிப்பூரி விற்கும் வீராங்கனை

இதே போல் 2006- ஆம் ஆண்டு ஆசிய தடகளப் போட் டியில் வென்ற வீராங்கனை சீதா பானிப்பூரி விற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ கத்தில் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகள் சித்தாளாகவும், செங்கல் சூளைகளில் கூலி வேலை செய்பவர்களாகவும் உள்ளனர். கேரளாவில் சைக்கிள் பந்த யம் ஒன்றில் அய்ரோப்பிய சாம் பியன் பட்டம் வென்ற பெண் ஒருவர் சைக்கிள் கடையில் பஞ்சர் ஒட்டும் வேலையைச் செய்து வாழ்க்கையை ஓட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

கிரிக்கெட் கொள்ளை!

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 100 சத வீதம் உயரக்கூடும் என தகவல் கள் வெளியாகி உள்ளன.

இந்திய கிரிக்கெட் வீரர்க ளின் சம்பளத்தை உயர்த்தும்படி கேப்டன் விராட் கோலி, மூத்த வீரர் தோனி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் பிசிசிஅய்-யின் நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராயை இந்த மாதத்தின் தொடக்கத்தில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அப்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண் டனர்.

பல மணி நேரம் நடை பெற்ற பேச்சுவார்த்தையின் போது, இந்திய வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்தும், அதேவேளையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் சம்பளம் பெறும் விகி தம் குறித்தும் ஒப்பிட்டு விவா தம் நடைபெற்றது. இதன்முடி வில் பிசிசிஅய் நிர்வாகக்குழு, வீரர்களின் சம்பளம் உயர்த்தப் பட வேண்டும் என்பதை ஏக மனதாக ஏற்றுக்கொண்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இந்திய அணி வீரர்களின் சம்பளம் அடுத்த சீசன் முதல் 100 சதவீதம் உய ரக்கூடும் என தற்போது தகவல் கள் வெளியாகி உள்ளன. சர்வ தேச கிரிக்கெட், உள்ளூர் போட் டிகளில் விளையாடும் வீரர்கள் என ஒட்டுமொத்தமாக பிசிசிஅய் ஒரு சீசனுக்கு ரூ.180 கோடியை தற்போது சம்பள மாக வழங்கி வருகிறது. இந்த தொகையில் ரூ.200 கோடி கூடுதலாக சேர்க்கப்படக்கூடும் என அதிகாரப்பூர்வமற்ற தக வல் கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டில் விராட் கோலி, பிசிசிஅய்-யிடம் வரு மானமாக ரூ.5.5 கோடியை பெற்றுள்ளார். இனிமேல் இது ரூ.10 கோடியாக உயரக்கூடும். இதேபோல் ராஞ்சி கோப்பை யில் விளையாடும் வீரர்களின் சம்பளம் ஒரு சீசனுக்கு ரூ.20 முதல் 30 லட்சம் வரை உயர வாய்ப்பிருப்பதாகவும் கூறப் படுகிறது. தற்போது ராஞ்சி கோப்பையில் விளையாடும் வீரர்கள் ஒரு சீசனுக்கு ரூ.12 லட்சம் முதல் 15 லட்சம் வரை ஊதியமாக பெற்று வருகின் றனர்.

தற்போதைய ஒப்பந்தத்தின் படி இந்திய கிரிக்கெட் வீரர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப் பட்டு அதன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வரு கிறது. ஏ கிரேடு வீரர்களுக்கு ரூ.2 கோடியும், பி கிரேடு வீரர்களுக்கு ரூ.1 கோடியும், சி கிரேடு வீரர்களுக்கு ரூ.50 லட் சமும் வழங்கப்பட்டு வருகின் றன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner