எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்தியன் எக்ஸ்பிரஸ்' அம்பலப்படுத்துகிறது

திருவனந்தபுரம் நவ.2 தென் மாநிலங்களில் மதக் கலவரம் உருவாக்கும் வகையில் பா.ஜ.க. செய்துவரும் சூழ்ச்சித் திட்டங் கள் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ்' (1.11.2018) ஏட்டில் கூறப்பட்டுள்ளதாவது:

சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரம் தொடர்பாக ரத யாத்திரை நடத்தப்போவதாக பாஜக அறிவித் துள்ளது. சமீபத்தில் கேரளா வந்த அமித்ஷா தென்மாநிலங்களில் பாஜக கட்சி வளரவேண்டுமானால் பாபர் மசூதி பிரச்சினையில் ரத யாத்திரை நடத்தி நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்தி கட்சியை வளர்த்தது போன்று தற்போது கேரளத்தில் மீண்டும் ஒரு ரத யாத்திரை நடத்தவேண்டும் என்று உத்தரவிட்டதாகவும், அதனடிப்படை யில் இந்த ரதயாத்திரை தொடங்க உள்ள தாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாட்டிற்காகக் கோவிலுக்குள் செல்லலாம் எனத் தீர்ப்பு ஒன்றினை வழங்கியது உச்சநீதி மன்றம். இதனைத் தொடர்ந்து இம் மாதம் சபரிமலைக் கோவில் மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது. உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பினை ஏற்று பல பெண்கள் உள்ளே நுழைய முயன்றனர். ஆனால், கோவிலின் முன்னாள் பக்தர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதனால் கோவிலுக்குள் பெண்களால் செல்ல இயலவில்லை.

ஒவ்வொரு கட்சியினரும் சபரி மலை விவகாரத்தில் அரசியல் ஆதா யம் தேடும் வகையில் நடந்து கொண் டனர். இந்நிலையில் பாஜக 6 நாள்கள் ரதயாத்திரை நடைபெறும் என அறிவித் திருக்கிறது. இந்த ரத யாத்திரை கேரள பாஜக தலைவர் சிறீதரன் பிள்ளை மற்றும் பாரத் தர்ம சேனா கட்சியின் தலைவர்துஷார்வேலப்பள்ளிமுன்னி லையில் நடைபெற உள்ளது. ஈழவக் குழுவின் தலைவராக இருந்த வேலப் பள்ளி நடேசனின் மகன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கசரகோட் மாவட்டத்தில் இருக்கும் மாத்தூர் கோவிலில் நவம்பர் 8 ஆம் தேதி தொடங்கி எருமேலியில் இந்த ரதயாத்திரை நவம்பர் 13 ஆம் தேதி முடிவடைகிறது.  இந்த ரத யாத்திரையில் இந்துக்கள் மட்டும் பங்கேற்கவில்லை. இந்த ரத யாத்திரை அமையும் வழியில் இருக்கும் 52 கிருத்துவ தேவாலயங்கள் மற்றும் 12 இசுலாமிய வழிப்பாட்டுத் தலங்களில் இருக்கும் மத குருக்களிடம் சென்று அவர்களின் ஆசீர்வாதங்களை வாங்க இருப்பதாகவும் சிறீதரன் பிள்ளை குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் இந்த ரத யாத்திரையின் மூலம், மக்களிடம் கேரள கம்யூ னிஸ்ட்ஆட்சியினர்எவ்வாறாகசபரி மலை அய்யப்பன் கோவிலை அழிக்க முற்படுகிறார்கள் என்பதை விளக்குவோம் எனவும் அவர் குறிப் பிட்டிருக்கிறார். இந்த யாத்திரையில் கேரளாவில் இருக்கும் துறவிகள் பங் கேற்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

சபரிமலை விவகாரத்தில் ஏற்பட்டி ருக்கும் பிரச்சினைகளை பொதுவுடமைக் கட்சியை சேர்ந்திருக்கும் பெண்களும் கூட புரிந்திருக்கிறார்கள் என மற்றுமொரு பாஜக தலைவர் கூறியிருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணியின் பெயரில் இந்த ரத யாத்திரை நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.

சபரிமலை  அய்யப்பன் கோவில் விவகாரம் பாஜக ரத யாத்திரைக்கு எதிர்ப்பு

கேரளாவைஆளும்இடதுசாரிக் கட்சியின் உறுப்பினர் விஜயராக வன் கேரளத்தில் சட்ட ஒழுங்குப் பிரச்சினையை கொண்டு வருவதற் காகவே இந்த ரத யாத்திரையை மேற் கொள்ள இருக்கிறது பாஜக. எல்.கே.அத்வானியின் ரத யாத்திரை பாபர் மசூதி இடிப்பிற்கும், மதக் கலவரங்களுக்கும் வழிதிறந்ததுபோல் தான் பாஜகவின் இந்த யாத்திரை கேரளாவில் மதக் கலவரத்தை உண்டாக்கும்'' என்று குறிப் பிட்டிருக்கிறார்.

மேலும் அமித்ஷா போன்றோர்கள் ஒரு மதக்கலவரத்தை எப்படியும் உரு வாக்குவார்கள் என்று கூறியிருக்கிறார். அடுத்த மாதம் சபரிமலை தொடர்பான மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் வரை இது போன்ற யாத்திரைகளை பாஜக மேற்கொள்ளக் கூடாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

சமீபகாலமாக தமிழகம் மற்றும் கேரளத்தில் புஷ்கரணி விழிப்புணர்வு ரத யாத்திரை, விவேகானந்தர் 150- ஆம் ஆண்டு பிறந்த நாள் ரதயாத்திரை, இந்துக் கோவில் பாதுகாப்பு விழிப்புணர்வு ரத யாத்திரை என்று பல யாத்திரைகளை திட்டமிட்டு நடத்திப் பதட்டமான சூழலை உருவாக்கி வருகிறது சங் பரிவார். தற்போது அய்யப்பன் கோவில் விவகாரம் தொடர்பாக ரதயாத்திரை நடத்தி மதக்கலவரத்தை உருவாக்கிட திட்டமிட்டுள்ளனர், என சமூக ஆர்வ லர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அமித்ஷாவின் திட்டம்

தமிழக மற்றும் கேரளாவில் பதட்ட மான சூழல் உருவாகும் முன்பு அமித் ஷாவின் வருகை கட்டாயம் இருக்கும்; அக்டோபர் வாரம் இறுதியில் கேரளா வந்த அமித்ஷா உச்சநீதிமன்றத் தீர்ப் பிற்கு எதிராக பேசியிருந்தார். இது தொடர்பாக அவர் மீது பீகாரில் வழக்கு தொடர்ந்திருப்பதும் குறிப்பிடத் தக்க தாகும்.''

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner