எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, நவ.7 பொதுத்துறை நிறுவனங் கள் தன்னார்வத்துடன் படேல் சிலை திட்டத்துக்கு பொதுத்துறை நிறுவனங்களின் சார்பில் சமூக பொறுப்பு நிதியாக அளிக்கப்பட்டது.

இந்தியன் எண்ணெய்க் கழகம்  ரூ.900 கோடி

ஓஎன்ஜிசி ரூ.500 கோடி

பாரத் பெட்ரோலியம் ரூ.250 கோடி

கெயில் நிறுவனம் ரூ.250 கோடி

பவர் கிரிட் ரூ.125 கோடி

குஜராத் மினரல்ஸ் வளர்ச்சிக்கழகம் ரூ.100 கோடி

எஞ்சினியர்ஸ் இந்தியா ரூ.50 கோடி

பெட்ரோனெட் இந்தியா ரூ.50 கோடி

பால்மெர் லாரே ரூ.50 கோடி

இந்தப் பட்டியலில் பிரதமர் மோடி யின் நெருக்கமான நண்பர்களான அனில் அம்பானி, முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, சாமியார் ராம்தேவ் ஆகியோர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணெய்நிறுவனங்களில்பொதுத் துறை மேற்கண்ட இவர்கள் நிறுவனங் களில் முதலீட்டாளர்களாக உள்ளனர்.

எண்ணெய் நிறுவனங்கள் பெட் ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று கூச்சல் நாடு முழுவதும் கேட்டுவருகின்ற அதே நேரத்தில், விலை குறைப்புக்கு முன்வராத எண்ணெய் நிறுவனங்கள் இதுபோன்று அதிக அளவிலான நிதித்தொகையை சிலை திட்டத்துக்கு அளித்திருப்பது எப்படி?

முட்டாள்தனமான சிலை எழுப்பு கின்ற இத்திட்டத்துக்கு சிறிதுகூட வெட்கமின்றி சமூக பொறுப்புக்கான நிதி என்று கூறிக்கொண்டு அளித்துள்ளார்கள். இதில் கட்சி ஆர்வத்துடன் இருந்தால், நண்பர்களிடம் இத்திட்டத்தை சிறப்பிக்க ஏன் கேட்கவில்லை?

எல்லாவற்றையும்விட, இது யார் பணம்? இந்தியா என்பது தனிப்பட்ட எவரின் கட்டுப்பாட்டிலும் இல்லை. இது நம்முடைய பணம். வரி செலுத்து வோரின் பணம்.

இந்தியாவே.... எவ்வளவு காலத்துக்கு அமைதியாக இருப்பாய்?

மராத்திய ஏட்டின் அம்பலம்

(மராத்தி மொழி ஏடான லோக்சத்தா ஆசிரியர் கிரிஷ் குபேர் கட்டுரையின் அடிப்படையில் தகவல்கள் பகிரப்பட் டன)

மேற்கண்ட பதிவு சமூக ஊடகங்களில் பலராலும பகிரப்பட்டு வருகிறது.

காந்தியார் கொல்லப்பட்ட நாளின்
காலெண்டர் இடம்பெற்று இருப்பது ஏன்?

குஜராத் மாநில அரசால் முன்வைக்கப் பட்ட சாதாரண திட்டம், மத்தியில் மோடி தலைமையிலான அரசு அமைந்த பிறகு ரூ.3,000 கோடியை செலவழித்து மத்திய அரசின் திட்டமாக மாற்றப்பட்டது. சர்தார் சிலை திட்டம் தற்பொழுது ஒற்று மைக்கான சிலை என்று மத்திய அரசால் பெயரிடப்பட்டுள்ளது.

நாட்டின் விடுதலைப் போராட்டத் தினை அறவழிப் போராட்டமாக தலைமையேற்று நடத்தியவர் காந்தியார் ஆவார். அவர் பிறந்த மாநிலத்தில் அவரைச் சிறப்பு செய்வதற்காக இதுபோன்ற திட்டங்களை மோடி கொண்டு வரவில்லை. நாட்டின் விடுத லைக்குப் பின்னர் கட்டமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்த நேரு உள்ளிட்ட மற்ற தலைவர்களை சிறப்பித்திட மோடியிடம் திட்டம் ஏதும் கிடையாதா? நாட்டின் விடுதலையைத் தொடர்ந்து அய்தராபாத் நிஜாமுக்கு எதிரான நடவடிக்கை எடுத்த ஒன்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு படேலுக்கு சிலை என்றும் அதுவும் ஒற்றுமைக்கான சிலை என்றும் கூறி மோடியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஏராளமான கேள்விகள் சமூக ஊடகங்களில் பலராலும் முன் வைக்கப்பட்டாலும், ஆக்கபூர்வமான பதில் பாஜக தரப்பிலிருந்து அளிப்பதற்கு யாரும் கிடையாது.

சுற்றுலா வளர்ச்சி பெறும், அதன் மூலம் வருவாய் பெருகும் என்று கூறிக் கொண்டு, ரூ.3,000 கோடியில் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

ஒற்றுமைக்கான சிலை என்று திட் டத்தின் பெயரில் இணையதளத்தில் பல் வேறு தகவல்கள் பதிவு செய்யப்பட் டுள்ளன.

ஒரு காலெண்டர்

சிலை அமைக்கப்பட்ட பகுதியில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகள்குறித்த தகவல் பகுதியில் காலெண்டர் மட்டும் உள்ளது. நிகழ்ச்சிகள் ஏதும் பதிவு செய் யப்படவில்லை.

அந்த காலெண்டர் 1948 ஜனவரி என்று குறிப்பிடுகிற பக்கத்தைக் கொண்டு, ஜனவரி 30 தேதி வரை மட்டும் உள்ளது. அந்த காலெண்டர் அத்துடன் கிழிக்கப்பட்டு இருப்பதைப்போல் உள்ளது. ஜனவரி மாதம் 31 ஆம் தேதி இடம்பெறவில்லை.

சிலை அமைக்கப்பட்ட நாளைக் குறிக்கின்ற காலெண்டர் அல்லது நாட்டின் விடுதலையைக் குறிப்பிடும் வகையில் 1947 ஆகஸ்ட் 15 நாளைக் கொண்ட காலெண்டரை பதிவு செய்தி ருக்கலாம். அய்தராபாத் நிஜாம் இந்தியாவுடன் இணைய விரும்பாத நிலையில் இராணு வத்தைக் கொண்டு அடக்கி அய்தரா பாத் நிஜாம் அரசை இந்தியாவின் கட் டுப்பாட்டில் கொண்டுவந்தார் படேல். சுதந்திர இந்தியாவின் உள்துறை அமைச்சர் படேல்  எடுத்த போலீஸ் ஆக்ஷன் என்னும் நடவடிக்கைகூட 1948 இல் செப்டம்பர் 17 இல்தான் நடந்தது. ஆபரேஷன் கேட்டர்பில்லர், ஆபரேஷன் போலோ என்று அழைக்கப்பட்ட அந் நடவடிக்கையால் 27ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தார்கள் என்று அரசுத்தகவல் கூறுகிறது. காலெண்டர் பதிவில் அந்த மாதத் தையும் குறிப்பிடாமல், காந்தியார் கொல்லப்பட்ட 1948 ஜனவரி மாத காலெண்டரையே பதிவேற்றியுள்ளனர்.

ஒற்றுமைக்கானசிலைஎன்றுகூறிக் கொண்டு, பல மொழிகளில் வைக்கப் பட்ட கல்வெட்டுப் பெயர்ப் பலகையில் தமிழில் மொழியாக்கத்தைக் கேலிக் கூத்தாக்கியும் உள்ளனர். ஷிணீமீ ஷீயீ ஹிஸீவீஹ் என்பதை  ஒற்றுமைக்கான சிலை என்ப தற்கு பதிலாக ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி என்று தமிழில்  பொருளற்ற சொற்களால் பொறிக்கப்பட்டுள்ளது.

மேக்கர்ஸ் ஆப் மாடர்ன் இந்தியா என்கிற ஆங்கில நூலை வரலாற்றுப்பேராசிரியர் ராமச்சந்திர குகா எழுதியுள் ளார். அந்நூலின் அட்டைப் பக்கத் தில்தலைவர்கள்பலரின்பெயர்இடம் பெற்றுள்ளது. அப்பட்டியலில் படேல் பெயர் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

உலக அளவில் மிக அதிக உயர மானசிலைஎன்றுகுறிப்பிட்டு597 அடி  (182 மீட்டர்) உயரத்தில்அமைத்து ஆடம்பரத்துடன் பெருமை பேசிவருபவர் கள் வரலாற்றின் முக்கியத்துவம் குறித்து பேசுவதற்கு ஏதும் இல்லை என்பதால் சுற்றுலா, வருவாய் என்று கூறுகின்றனர்.

பண வசூல்

சிலை மேடை அமைப்பிலிருந்து காண்பது, மலர் பள்ளத்தாக்கு பகுதி, நினைவகம், அருங்காட்சியகம், ஒலி ஒளி காட்சிக்கூடம், சிலை அமைக்கப் பட்டுள்ள பகுதி, சர்தார் சரோவர் அணை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்குக் கட்டணம் 3 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ரூ.200, பெரியவர்களுக்கு  ரூ.350, பேருந்தில் செல்வதற்குக் கட்டணம் ரூ.30 என்றும்,

மலர் பள்ளத்தாக்கு பகுதி, அருங் காட்சியகம், ஒலி, ஒளி காட்சிக்கூடம், சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதி, சர்தார் சரோவர் அணை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்குக் கட்டணம் 3 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ரூ.60, பெரியவர்களுக்கு  ரூ.120, பேருந்தில் செல்வதற்குக் கட்ட ணம் ரூ.30 என்றும்  அரசின் இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Editor Girish Kuber’s article in Marathi newspaper Loksatta dt 3.11.2018
https://www.loksatta.com/anyatha-news/jawaharlal-nehru-vallabhbhai-patel-1783634/

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner